பின்புல நிறங்களையும் பின்புல வரைவியல்களையும் வரையறுத்தல்

நீங்கள் ஒரு பின்புல நிறத்தை வரையறுக்கவோ LibreOffice ரைட்டரிலுள்ள பல்வேறு பொருள்களுக்கு வரைவியயைப் பின்புலமாக பயன்படுத்தவோ முடியும்.

உரை வரியுருக்களுக்கு ஒரு பின்புலத்தைச் செயல்படுத்த

  1. வரியுருக்களைத் தேர்க.

  2. வடிவூட்டு - வரியுரு ஐத் தேர்ந்தெடுக.

  3. பின்புலம் கீற்றைச் சொடுக்குக, பின்புல நிறத்தைத் தேர்க.

ஒரு பத்திக்குப் பின்புலத்தைச் செயல்படுத்த

  1. பத்தியில் இடஞ்சுட்டியை வைக்கவும் அல்லது பல பத்திகளைத் தேரவும்.

  2. வடிவூட்டு - பத்தி ஐத் தேர்க.

  3. பின்புலம் கீற்று பக்கத்தில், பின்புல நிறம் அல்லது பின்புல வரைவியலைத் தேர்க.

Tip Icon

பின்புலத்தில் பொருளைத் தேர்வதற்கு, விசையைக் கீழ் வைத்திருப்பதோடு பொருளைச் சொடுக்குக. மாற்றாக, பொருளைத் தேர்வதற்கு மாலுமியைப் பயன்படுத்துக.


அட்டவணை அனைத்துக்கும் அல்லது அட்டவணையின் ஒரு பகுதிக்குப் பின்புலத்தைச் செயல்படுத்த

  1. உங்களின் உரை ஆவணத்திலுள்ள அட்டவணையினுள் இடஞ்சுட்டியை வைக்கவும்.

  2. Choose Table - Properties.

  3. பின்புலம் கீற்று பக்கத்தில், பின்புல நிறம் அல்லது பின்புல வரைவியலைத் தேர்க.

  4. க்கானபெட்டியில், நடப்புக் கலத்திற்கோ, நடப்பு நிரைக்கோ முழு அட்டவணைக்கோ நிறத்தையா வரைவியலையா செயல்படுத்தவேண்டும் என்பதைத் தேர்க. உரையாடலைத் திறப்பதற்கு முன் நீங்கள் பல கலங்களையும் நிரைகளையும் தேர்ந்தால், மாற்றம் தெரிவில் செயல்படுத்தப்படுகிறது.

Tip Icon

அட்டவணைப் பகுதிகளுக்குப் பின்புலத்தைச் செயல்படுத்த நீங்கள் ஒரு படவுருவையும் பயன்படுத்தலாம்.


Please support us!