பொருள்களை நிலைப்படுத்தல்

ஒரு பொருளையோ, வலைவியலையோ, சட்டகத்தையோ ஒரு ஆவணத்தில் நிலைப்படுத்த நீங்கள் நங்கூரங்களைப் பயன்படுத்தலாம். ஒரு நங்கூரமிட்ட உருப்படி அதே இடத்தில் இருக்கும்; நீங்கள் ஆவணத்தை மாற்றியமைத்தால் மட்டும் நகரும். பின்வரும் நங்கூரத் தேர்வுகள் கிடைப்பிலுள்ளன:

நங்கூரமிடல்

விளைவு

வரியுருவாக

தேர்ந்த உருப்படியை நடப்பு உரையில் ஒரு வரியுருவாக நங்கூரமிடுகிறது. தேர்ந்த உருப்படியின் உயரம் நடப்பு எழுத்துருவின் அளவைவிட கூடுதலாக இருந்தால், உருப்படி உள்ள வரியின் உயரமும் கூட்டப்படும்.

ஒரு பிம்பத்தை ஒரு HTML பக்கத்தின் நடுவில் வைக்க, பிம்பத்தை நுழைத்தபின், அதனை "வரியுருவாக" நங்கூரமிட்டுவிட்டுப் பத்தியை மையப்படுத்துக.

வரியுருவுடன்

தேர்ந்த உருப்படியை ஒரு வரியுருவுடன் நங்கூரமிடுகிறது.

பத்தியுடன்

தேர்ந்த உருப்படியை நடப்பு பத்தியுடன் நங்கூரமிடுகிறது.

பக்கத்துடன்

தேர்ந்த உருப்படியை நடப்பு பக்கத்துடன் நங்கூரமிடுகிறது.

சட்டகத்துடன்

தேர்ந்த உருப்படியைச் சுற்றியுள்ள சட்டகத்துடன் நங்கூரமிடுகிறது.


நீங்கள் ஒரு பொருளையோ, வரைவியலையோ, சட்டகத்தையோ நுழைத்தால், அது நங்கூரமிடப்பட்ட இடத்தில் ஒரு நங்கூரப் படவுரு தோன்றுகிறது. நங்கூரமிட்ட உருப்படியை நீங்கள் வேறு இடத்துக்கு இழுத்துச் சென்று நிலைப்படுத்தலாம். ஒரு உருப்படியின் நங்கூரமிடல் தேர்வுகளை மாற்ற, உருப்படியை வலச்சொடுக்குக, பின்னர் நங்கூரம் எனும் தேர்வைத் துணைப்பட்டியிலிருந்து தேர்ந்தெடுக.

Please support us!