ஒருங்கிணைத்த காட்சி

இயக்கத்திலுள்ள ஆவணத்தின் நடப்புத் தகவலைக் காட்சியளிக்கிறது.

இடஞ்சுட்டி பெயரிட்ட பிரிவில் இருக்கும்போது, பிரிவின் பெயர் தோற்றமளிக்கிறது. இடஞ்சுட்டி அட்டவணையில் இருக்கும்போது, அட்டவணை கலத்தின் பெயர் தோற்றமளிக்கிறது. நீங்கள் சட்டகத்தையோ வரை பொருள்களையோ தொகுக்கும்போது பொருளின் அளவு காட்டப்படுகிறது.

இடஞ்சுட்டி உரைகளுக்கிடையே நிலைப்படுத்துகையில், நீங்கள் புலங்கள் உரையாடலைத் திறக்க இந்தப் புலத்தை நீங்கள் இருமுறை சொடுக்கலாம். இந்த உரையாடலில், நடப்பு இடஞ்சுட்டி நிலையில் உங்கள் ஆவணத்தில் நுழைக்கப்படவேண்டிய ஒரு புலத்தை நீங்கள் வரையறுக்கலாம். இடஞ்சுட்டி அட்டவணையில் நிலைப்படுத்தப்படும்போது, இப்புலத்தை இருமுறை சொடுக்குதல் அட்டவணை வடிவூட்டு உரையாடலை அழைக்கும். தேர்ந்த பொருளைச் சார்ந்து, ஒரு பிரிவு, ஒரு வரைவியல் பொருள், ஒரு மிதக்கும் சட்டகம், ஒரு OLE பொருள், நேரடி எண்ணிடல் அல்லது ஒரு பொருளின் இடத்தையும் அளவையும் தொகுப்பதற்கான ஒர் உரையாடலை நீங்கள் அழைக்கலாம்.

Please support us!