LibreOffice 7.5 உதவி
நீங்கள் அகவரிசை தலைப்புகள், பிரிப்பிகள், அகவரிசை உள்ளீடுகள் ஆகியவற்றின் வடிவூட்டலை மாற்ற வெவ்வேறு பத்தி பாணிகளை ஒதுக்கலாம். இந்த உரையாடலில் நீங்கள் பத்தியின் பாணியையும் மாற்றியமைக்க முடியும்.
நீங்கள் மாற்றும் வடிவூட்டலின் அகவரிசை மட்டத்தைத் தேர்க.
தேர்ந்த அகவரிசை மட்டத்திற்கு நீங்கள் செயல்படுத்தவிருக்கும் பத்திப் பாணியைத் தேர்க, பிறகு ஒப்படை(<) பொத்தானைச் சொடுக்குக.
தேர்ந்த பத்திப் பாணியுடன் தேர்ந்த அகவரிசை மட்டத்தை வடிவூட்டுகிறது.
"முன்னிருப்பு" பத்திப் பாணிக்குத் தேர்ந்த மட்டத்தின் வடிவூட்டலை மீட்டமைக்கிறது.
பத்திப் பாணி உரையாடலைத் திறக்கிறது, இங்கு நீங்கள் தேர்ந்த பத்திப் பாணியை மாற்றியமைக்க முடியும்.