செயலாற்றிகள்

நீங்கள் தேரும் புல வகையைச் சார்ந்து, நீங்கள் சில செயலாற்றிகளுக்கு நிபந்தனைகளை ஒதுக்கலாம். எ.கா, ஆவணத்திலுள்ள புலத்தை நீங்கள் சொடுக்கையில் ஒரு பெருமத்தை நிறைவேற்றும்ஒரு புலத்தை அல்லது ஒரு புலத்தை மறைக்கும் நிபந்தனையை நீங்கள் வரையறுக்கலாம். தேவைப்படும்போது உங்கள் ஆவணத்தினுள் வரைவியல்கள், அட்டவணைகள், சட்டகங்கள், மற்ற பொருள்கள் போன்ற இடம்பிடிகளையும் நீங்கள் வரையறுக்கலாம்.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம் - கூடுதல் புலங்கள் - செயலாற்றிகள் கீற்றைத் தேர்ந்தெடுக


வகை

கிடைக்கப்பெறும் புல வகைகளைப் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க, ஒரு புல வகையைச் சொடுக்கி, தேர் பட்டியலில் ஒரு புலத்தைச் சொடுக்குக, பிறகு நுழை ஐச் சொடுக்குக. பின்வரும் புலங்கள் கிடைக்கப்பெறுகின்றன:

வகை

அர்த்தம்

நிபந்தனை உரை

சில நிபந்தனை பொருந்தும்போது உரையை நுழைக்கிறது. எ.கா, நிபந்தனை பெட்டியில் "sun eq 1" ஐயும் உங்களுக்கு வேண்டிய உரையை "sun" மாறி "1" உடன் சமமாகையில் பிறகுபெட்டியிலும் உள்ளிடுக. உங்களுக்கு வேண்டுமானால், வேறு பெட்டியில் நிபந்தனை பொருந்துகையில் நீங்கள் விரும்பும் உரையையும் உள்ளிடலாம். "sun" மாறியை வரையறுக்க, மாறிகள் கீற்றைச் சொடுக்குக, "மாறி அமை" ஐத் தேர்க, பெயர் பெட்டியில் "sun" ஐயும் அதன் மதிப்பை மதிப்பு பெட்டியில் தட்டச்சிடுக.

உள்ளீட்டுப் பட்டியல்

ஒரு பட்டியலிலிருந்து ஒர் உருப்படியைக் காட்சியளிக்கும் ஓர் உரைப் புலத்தை நுழைக்கிறது. நீங்கள் பட்டியலில் உருப்படிகளை சேர்க்க, தொகுக்க, அகற்ற, அதன் ஒழுங்கமைவுகளை மாற்றவும் முடியும். உங்கள் ஆவணத்தில் உள்ளீட்டுப் பட்டியல் புலத்தைச் சொடுக்குக அல்லது உருப்படியைத் தேர்ந்தெடுகஉரையாடலைக் காட்சியளிக்க சொடுக்குக.

உள்ளீட்டுப் பட்டியல்

ஆவணத்தில்சொடுக்கல் இன் மூலம் நீங்க திறக்கமுடிகிற உரைப் புலத்தை நுழைக்கிறது. நீங்கள் பிறகு காட்சியளிக்கப்படுகின்ற உரையை மாற்றலாம்.

பெருமத்தைச் செயலாக்கு

ஆவணத்தில் நீங்கள் புலத்தைச் சொடுக்கும்போது ஒரு பெருமத்தை இயக்குகிற உரைப் புலத்தை நுழைக்கிறது. ஒரு பெருமத்தைப் புலத்திற்கு ஒதுக்க, பெருமம் பொத்தானைச் சொடுக்குக.

இடம்பிடி

ஆவணத்தில் இடம்பிடி புலத்தை நுழைக்கிறது, எ.கா வரைவியல்கள். நீங்கள் இடம்பிடி புலத்தை ஆவணத்தில் நீங்கள் சொடுக்கும்போது, காணப்படாத உருப்படியை நுழைக்க நீங்கள் தூண்டப்படுவீர்.

மறைந்துள்ள உரை

Inserts a text field that is hidden when the condition that you specify is met. To use this function, choose - LibreOffice Writer - View and clear the Hidden text check box.

மறைந்துள்ள பத்தி

Hides a paragraph when the condition that you specify is met. To use this function, choose - LibreOffice Writer - View and clear the Hidden paragraphs check box.

வரியுருக்களை ஒருங்கிணை

6 மேலான வரியுருக்களை ஒருங்கிணைக்கிறது, ஆதலால் அவை ஒற்றை வரியுருவாகச் செயல்படும். இச்சிறப்பியல்பானது ஆசிய எழுத்துருக்கள் ஆதரிக்கபடும்போது மட்டுமே கிடைக்கும்.


note

தொடர்புடைய புல வகைகளை வகை பட்டியலில் தேர்ந்தால் மட்டுமே பின்வரும் புலங்கள், நுழைக்கபட முடியும்.


வடிவூட்டு

தேர்ந்த புலத்திற்கு நீங்கள் செயல்படுத்தவிருக்கும் வடிவூட்டத்தைச் சொடுக்குக, அல்லது தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுக்க "கூடுதல் வடிவூட்டங்களைச்" சொடுக்குக.

செயலாற்றிப் புலங்களுக்கு, வடிவூட்டுப் புலங்கள் இடம்பிடி வகை புலங்களுக்காக மட்டுமே பயன்படுகின்றன. இங்கு, வடிவூட்டலானது இடம்பிடிக்கான பொருளைத் தீர்மானிக்கிறது.

நிபந்தனை

நிபந்தனை உடன் இணைக்கப்பட்ட புலங்களுக்கான, வரன்முறையை இங்கு உள்ளிடவும்.

பிஙகு, வேறு

நிபந்தனையானது பிறகு பெட்டியில் அனுசரிக்கும்போது காட்சியளிப்பதற்காக உரையை உள்ளிடுவதோடு, நிபந்தனையானது வேறு பெட்டியில் அனுசரிக்கப்படாதபோது காட்சியளிப்பதற்காக உரையை உள்ளிடுக.

"databasename.tablename.fieldname" வடிவூட்டலைப் பயன்படுத்தி நீங்கள் பிறகு மற்றும் வேறு பெட்டிகளில் தரவுத்தளப் புலங்களையும் நுழைக்கலாம்.

Note Icon

அட்டவணை அல்லது புலத்தின் பெயர் தரவுத்தத்தில் இல்லையென்றால்,எதுவுமே நுழைக்கப்படவில்லை ஆகும்.


Note Icon

நீங்கள் எடுத்துரையை "databasename.tablename.fieldname" இல் உட்படுத்தினால், கூற்றானது உரையாக நுழைக்கப்படுகிறது.


மேற்கோள்

புலத்தில் நீங்கள் காட்சியளிக்க விரும்பும் உரையை தட்டச்சிடுக. நீங்கள் இடம்பிடி புலத்தை நுழைத்தால், புலத்தில் சுட்டெலியின் சுட்டியை வைக்கும்போது காட்சியளிக்கும் நீங்கள் விரும்பும் உதவிச் சிறுதுப்பைத் தட்டச்சிடுக.

வடிவூட்டு

புலத்தைச் சொடுக்கியவுடன் நீங்கள் இயக்கவிருக்கும் பெருமத்தைத் தேர்க.

பெரும பெயர்

தேர்ந்த பெருமத்தின் பெயரைக் காட்சியளிக்கிறது.

இடம்பிடி

இடம்பிடி புலத்தில் தோற்றமளிக்க நீங்கள் விரும்பும் உரையைத் தட்டச்சிடுக.

மறைந்துள்ள உரை

நிபந்தனை பொருந்தினால் நீங்கள் மறைக்க விரும்பும் உரையைத் தட்டச்சிடுக.

வரியுருக்கள்

நீங்கள் ஒருங்கிணைக்கவிரும்பும் வரியுருக்களை உள்ளிடுக. நீங்கள் அதிகபட்சம் 6 வரியுருக்களை ஒருங்கிணைக்கலாம். இத்தேர்வானது, வரியுருக்களை ஒருங்கிணை புல வகைக்கு மட்டுமே கிடைக்கும்.

மதிப்பு

தேர்ந்த புலத்தின் மதிப்பை உள்ளிடுக.

பெருமம்

பெருமத் தேர்வி ஐத் திறக்கிறது, ஆவணத்திலுள்ள தேர்ந்த புலத்தை நீங்கள் சொடுக்கும்பொழுது இயங்கக்கூடிய பெருமத்தை இங்கு நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். இந்தப் பொத்தான் "பெருமத்தைச் செயலாக்கு" எனும் செயலாற்றிப் புலத்திற்கு மட்டுமே கிடைக்கப்பெறும்.

பின்வரும் கட்டுப்பாடுகள் உள்ளீட்டுப் பட்டியல் புலங்களுக்காகக் காட்சியளிக்கப்படுகின்றன:

உருப்படி

ஒரு புதிய உருப்படியை உள்ளிடுக.

சேர்

உருப்படிஐப் பட்டியலுக்குச் சேர்கிறது.

பட்டியலிலிருந்து உருப்படிகள்

உருப்படிகளைப் பட்டியலிடுகிறது. மிக உயர்ந்த உருப்படி ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளது.

அகற்று

தேர்ந்த உருப்படியைப் பட்டியலிலிருந்து அகற்றுகிறது.

மேல் நகர்

தேர்ந்த உருப்படியைப் பட்டியலில் மேல் நகர்த்துகிறது.

கீழ் நகர்

தேர்ந்த உருப்படியைப் பட்டியலில் கீழ் நகர்த்துகிறது.

பெயர்

உள்ளீட்டுப் பட்டியலுக்கானஒரு தனித்த பெயரை உள்ளிடுக.

உருப்படியைத் தேர்ந்தெடுக

ஆவணத்தில் நீங்கள் உள்ளீட்டுப் பட்டியல்புலத்தைச் சொடுக்கும்போது இந்த உரையாடல் காட்டப்படுகிறது.

ஆவணத்தில் நீங்கள் காட்சியளிக்கவிரும்பும் உருப்படியைத் தேர்ந்தெடுக, பிறகுOK ஐச் சொடுக்குக.

தொகு

புலங்களைத் தொகு: செயலாற்றிகள் உரையாடலைக் காட்சியளிக்கிறது. இங்கு நீங்கள் உள்ளீட்டுப் பட்டியல் ஐத் தொகுக்க முடியும்.

அடுத்து

நடப்பு உள்ளீட்டுப் பட்டியல் ஐ மூடுவதோடு கிடைத்தால்,அடுத்த உள்ளீட்டுப் பட்டியைலைக் காட்சியளிக்கிறது. உருப்படியைத் தேர்ந்தெடு உரையாடலை Ctrl+Shift+F9 கொண்டு நீங்கள் திறக்கும்போது இந்தப் பொத்தானைப் பார்க்கலாம்.

Please support us!