ஆவணம்

புலங்களானவை நடப்பு ஆவணத்தைப் பற்றிய தகவல்களை ,எ.கா கோப்பு பெயர், வார்ப்புரு, புள்ளியியல், பயனர் தரவு, தேதி, நேரம் போன்றவற்றை நுழைக்க பயன்படுகின்றன.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம்- கூடுதல் புலங்கள் - ஆவணம் கீற்றைத் தேர்ந்தெடுக


Note Icon

HTML தேதி, நேரப் புலங்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு, சிறப்புLibreOffice வடிவூட்டுகள் பயன்படுகின்றன.


வகை

கிடைக்கப்பெறும் புல வகைகளைப் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க, ஒரு புல வகையைச் சொடுக்கி, தேர் பட்டியலில் ஒரு புலத்தைச் சொடுக்குக, பிறகு நுழை ஐச் சொடுக்குக. பின்வரும் புலங்கள் கிடைக்கப்பெறுகின்றன:

வகை

அர்த்தம்

ஆசிரியர்

நடப்புப் பயனரின் பெயரை நுழைக்கிறது.

அத்தியாயம்

அத்தியாய எண்ணை மற்றும் /அல்லது அத்தியாய பெயரை நுழைக்கிறது.

தேதி

நடப்புத் தேதியை நுழைக்கிறது. நீங்கள் தேதியை நிலைத்த புலமாக நுழைக்க முடியும் - தேதி (நிலைத்த) - மாறாது, அல்லது மாறும் புலமாக - தேதி - இது தானாகவே புதுப்பிக்கப்படுகிறது. கைமுறையாக தேதி புலத்தைப் புதுப்பிக்க, F9 ஐ அழுத்துக.

கோப்பு பெயர்

நடப்பு ஆவணத்தின்கோப்பு பெயரை மற்றும்/ அல்லது கோப்பகப் பாதையை நுழைக்கிறது, அதே போல நீட்டிப்பு இல்லாமல் கோப்புப்பெயராகவும்.

பக்கம்

நடப்பு, முந்தைய அல்லது அடுத்த பக்க எண்ணை நுழைக்கிறது.

அனுப்புநர்

பயனர் தரவைக் கொண்டிருக்கும் புலத்தை நுழைக்கிறது. நீங்கள் காட்சியளிக்கப்படுகிற பயனர் தரவை - LibreOffice -பயனர் தரவுஐத் தேர்வதன் மூலம் மாற்றமுடியும்.

புள்ளியல்

ஆவணப் புள்ளியியல்களான பக்கம் மற்றும் சொல் எண்ணிக்கையை புலமாக நுழைக்கிறது. ஆவணத்தின் புள்ளியியலைப் பார்வையிட, கோப்பு - பண்புகள் தேர்ந்தெடுப்பதோடு, பிறகு புள்ளியியல் கீற்றைச் சொடுக்குக.

வார்ப்புருக்கள்

நடப்பு வார்ப்புருவின் கோப்பு பெயர், பாதை, கோப்பு நீட்சியில்லா கோப்பு பெயரையும் நுழைக்கிறது. நீங்கள் நடப்பு வார்ப்புருவில் பயன்படுத்தப்பட்ட "பகுப்பு" , "பாணி" வடிவூட்டுகள் போன்றவற்றின் பெயரையும் நுழைக்கலாம்.

நேரம்

நடப்பு நேரத்தை நுழைக்கிறது. நீங்கள் நேரத்தை நிலைத்த புலமாக நுழைக்கலாம் - நேரம் (நிலைத்த) அதாவது மாறாதது, அல்லது மாறும் புலமாக - நேரம் -அதாவது இது தானாகவே புதுப்பிக்கப்படும். கைமுறையாகநேரம்புலத்தைப் புதுப்பிக்க, F9 ஐ அழுத்துக.


Note Icon

தொடர்புடைய புல வகைகளை வகை பட்டியலில் தேர்ந்தால் மட்டுமே பின்வரும் புலங்கள், நுழைக்கபட முடியும்.


தேர்

வகை பட்டியலில் தேர்ந்த புல வகைக்குக் கிடைக்கப்பெறும் புலங்களைப் பட்டியலிடுகிறது. ஒரு புலத்தை நுழைக்க, புலத்தைச் சொடுக்கி, பிறகு நுழை ஐச் சொடுக்குக.

Tip Icon

பட்டியலிலிருந்து ஒரு புலத்தை விரைந்து நுழைக்க, ஐ கீழே அழுத்திருப்பதோடு புலத்தை இருமுறை சொடுக்குக.


புலங்கள்

செயலாற்றி

முந்தைய பக்கம்

ஆவணத்தில் முந்தைய பக்கத்தின் பக்க எண்ணை நுழைக்கிறது.

அடுத்த பக்கம்

அடுத்த பக்கத்தின் பக்க எண்ணை ஆவணத்தில் நுழைக்கிறது.

பக்க எண்

நடப்புப் பக்க எண்ணை நுழைக்கிறது.


வடிவூட்டுஇல், நீங்கள் பயன்படுத்தவிருக்கும் எண்ணிடல் வடிவூட்டத்தைச் சொடுக்குக.

உங்களுக்கு வேண்டுமானால், காட்டிய பக்க எண்ணுக்கான குறுங்கிடை ஐ நீங்கள் உள்ளிடலாம். 1 எனும் மதிப்பிலான குறுங்கிடைக்கு, நடப்புப் பக்க எண்ணுக்கு 1 கூடுதலாக எண்ணை புலாமனது காட்டும். ஆனால், அந்த எண்ணிலான பக்கம் இருந்தால் மட்டுமே. ஆவணத்தில் கடசி பக்கத்தில், அதே புலமானது காலியாக இருக்கும்.

குறுங்கிடை

தேதிக்கோ நேரப் புலத்திற்கோ நீங்கள் செயல்படுத்தவிரும்பும் அடைத்தொகுதியை உள்ளிடுக, எ.கா "+1".

Tip Icon

காட்சியளிக்கப்படுகின்ற எண்ணை இல்லாமல், நீங்கள் அசல் பக்க எண்ணை மாற்றவிரும்பினால் அடை மதிப்பைப் பயன்படுத்தாதீர். பக்க எண்களை மாற்ற, பக்க எண்கள்வழிகாட்டியை வாசிக்கவும்.


வடிவூட்டு

தேர்ந்த புலத்திற்கு நீங்கள் செயல்படுத்தவிருக்கும் வடிவூட்டத்தைச் சொடுக்குக, அல்லது தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுக்க "கூடுதல் வடிவூட்டங்களைச்" சொடுக்குக.

நீங்கள் "கூடுதல் வடிவூட்டுகளை" சொடுக்கும்போது, எண் வடிவூட்டு உரையாடல் திறக்கிறது, இங்கு நீங்கள் தனிப்பயன் வடிவூட்டை வரையறுக்க முடியும்.

நீங்கள் அத்தியாய புலத்திற்கான "பிரிப்பி இல்லாத அத்தியாய எண்ணை" தேர்ந்தால், கருவிகள் - அத்தியாய எண்ணிடல் இல் எண்ணுக்குக் குறிப்பிடப்பட்ட பிரிப்பிகள் காட்சியளிக்கப்படடுவதில்லை

நீங்கள் " அத்தியாய எண்ணை" மேற்கோள் புலங்களுக்கான வடிவூட்டு ஆக தேர்ந்தெடுத்தால், மேற்கோளிட்ட பொருள்களைக் கொண்டுள்ள அத்தியாய தலைப்புரை மட்டுமே புலத்தில் காட்சியளிக்கப்படுகிறது. அத்தியாய தலைப்புரைக்கான பத்தி பாணியானது எண்ணிடப்டவில்லையென்றால், புலமானது காலியாக விடப்படும்.

பின்வரும் எண் வீச்சு வடிவூட்டுகள் எண்ணிட்ட அல்லது பொட்டிட்ட பட்டியல்களுடன் வடிவூட்டிய பத்திகளுக்கானவை ஆகும்.

பகுப்பும் எண்ணும்

பத்தியின் தொடத்திலிருந்தும், எண்- வீச்சு புலத்திற்குமிடையே இருக்கும் அனைத்தையும் வடிவூட்டு கொண்டுள்ளது.

படவிளக்க உரை

எண்- வீச்சு புலத்திலிருந்து பத்தியின் இறுதிவரையிள்ள உரையை வடிவூட்டு கொண்டுள்ளது

எண்

மேற்கோள் எண்ணை மட்டுமே வடிவூட்டம் கொண்டிருக்கிறது.


நிலைத்த உள்ளடக்கம்

புலத்தை நிலையான உள்ளடக்கமாக நுழைக்கிறது, அதாவது புலத்தைப் புதுப்பிக்க முடியாது.

மட்டம்

தேர்ந்த புலத்தில் நீங்கள் உள்ளடக்கவிருக்கும் அத்தியாயத் தலைப்புரை மட்டத்தைத் தேர்க.

நாள்கள்/ நிமிடங்களில் குறுங்கிடை

தேதிக்கோ நேரப் புலத்திற்கோ நீங்கள் செயல்படுத்தவிரும்பும் அடைத்தொகுதியை உள்ளிடுக.

மதிப்பு

பயனர்-வரையறுத்த புலத்திற்கு நீங்கள் நீங்கள் சேர்க்கவிரும்பும் உள்ளடக்கங்களை உள்ளிடுக.

Please support us!