LibreOffice 7.5 உதவி
படவிளக்க விளக்கச்சீட்டுக்கு அத்தியாய எண்ணைச் சேர்க்கிறது. இந்த சிறப்பியல்பைப் பயன்படுத்த, நீங்கள் முதலில்திட்டவரை மட்டம் ஐ ஒரு பத்திப் பாணிக்கு அளிக்கவேண்டும், பிறகு உங்கள் ஆவணத்திலுள்ள அத்தியாய தலைப்புரைகளுக்குச் செயல்படுத்தவும்.
நீங்கள் அத்தியாய எண்களை படவிளக்க விளக்கச்சீட்டுகளுக்குச் சேர்க்கும்போது, எண்ணிடலானது அத்தியாய தலைப்புரையை எதிர்கொள்ளும்போது மீட்டமைக்கப்படுகிறது. எ.கா, அத்தியாயம் 1இல் கடைசி உரு "உரு 1.12" என்றால், அடுத்த அத்தியாயத்தின் முதல் உரு, "உரு 2.1". என்றிருக்கும்.
படவிளக்க விளக்கச்சீட்டில் உள்ளடக்குவதற்கு, அத்தியாய படிமுறையிலிருந்து திட்டவரை மட்டங்களின் எண்ணிக்கையை மேலிருந்து கீழ் தேர்க.
அத்தியாய எண்ணுக்கும் படவிளக்க எண்ணுக்குமிடையே நீங்கள் நுழைக்க விரும்பும் வரியுருவை உள்ளிடுக.
வரியுரு பாணியைக் குறிப்பிடுகிறது.
பொருளின் எல்லையையும் நிழலையும் படவிளக்கச் சட்டகத்திற்குச் செயல்படுத்துகிறது.