LibreOffice 24.8 உதவி
பிரிவின் பண்புகளை அமைக்கிறது.
புதுப் பிரிவுக்கு ஒரு பெயரைத் தட்டச்சிடுக. இயல்பாக, LibreOffice புதுப் பிரிவுகளுக்கு தானாகவே "பிரிவு X" எனப் பெயரை அளிக்கிறது, X என்பது தொடர்ச்சியான எண்ணாகும்.
வேறு ஆவணத்தின் உள்ளடக்கத்தையோ வேறு ஆவணத்திலிருந்து பிரிவையோ நடப்பு பிரிவில் நுழைக்கிறது.
DDE தொடுப்பை உருவாக்குகிறது. இந்தத் தெரிவுப் பெட்டியைத் தேர்வதோடு, பிறகு நீங்கள் பயன்படுத்தவிரும்பும் DDE கட்டளையை உள்ளிடுக. தொடுப்பு தெரிவுப் பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே DDE தேர்வு கிடைக்கப்பெறும்.
DDE கட்டளைக்கான பொது தொடரமைப்பானது:"<Server> <Topic> <Item>" ஆகும், அதாவது தரவைக் கொண்டிருக்கும் செயலியின் சேவையகத்தின் பெயர் DDE ஆகும். தலைப்பு, உருப்படியின் இடத்தைக் குறிக்கிறது ( பொதுவாகக் கோப்பின் பெயர்), உருப்படியானது அசல் பொருளைப் பிரதிந்திக்கிறது.
For example, to insert a section named "Section1" from a LibreOffice text document abc.odt as a DDE link, use the command: "soffice x:\abc.odt Section1". To insert the contents of the first cell from a Microsoft Excel spreadsheet file called "abc.xls", use the command: "excel x:\[abc.xls]Sheet1 z1s1". You can also copy the elements that you want to insert as a DDE link, and then Edit - Paste Special. You can then view the DDE command for the link, by selecting the contents and choosing Edit - Fields.
நீங்கள் நுழைக்கவிருக்கும் கோப்புக்கான கோப்பு பெயரையும் பாதையையும் உள்ளிடுக, அல்லது கோப்பை இடங்குறிக்க உலாவு பொத்தானைச் சொடுக்குக. DDE தேர்வுப் பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் பயன்படுத்தவிரும்பும் DDE கட்டளையை உள்ளிடுக.
நீங்கள் தொடுப்பாக நுழைக்க விரும்பும் கோப்பை இடங்காண்க, பிறகு நுழை ஐச் சொடுக்குக.
நீங்கள் ஒரு தொடுப்பாக நுழைக்க விரும்பும் கோப்பின் பிரிவைத் தேர்க.
இணைந்த பிரிவுகளைக் கொண்டிருக்கும் ஓர் ஆவணத்தை நீங்கள் திறக்கும்போது, தொடுப்புகளை உடனடியாகப் புதுப்பிக்க நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்.
தொகுக்கப்படுவதிலிருந்து தேர்ந்த பிரிவைத் தடுக்கிறது.
தேர்ந்த பிரிவைக் கடவுச்சொல்லுடன் பாதுகாக்கிறது. கடவுச்சொல்லானது கண்டிப்பாகக் குறைந்தபட்சம் 5 வரியுருக்களைக் கொண்டிருக்க வேண்டும்.
நீங்கள் நடப்புக் கடவுச்சொல்லை மாற்றக்கூடிய ஒரு உரையாடலைத் திறக்கிறது.
அச்சிட்டப்படுவதிலிருந்து தேர்ந்த பிரிவை மறைக்கவும் தடுக்கவும் செய்கிறது. மறைக்கப்பட்ட பிரிவுகளின் பாகங்கள் மாலுமியில் சாம்பல் நிறத்தில் தோன்றும். உங்களின் சுட்டெலியின் சுட்டியை மாலுமியில் ஒரு மறைக்கப்பட்ட பாகம் மீது நீங்கள் வைக்கும்போது, "மறைக்கப்பட்ட" ஐயின் உதவி சிறுதுப்பு காட்சியளிக்கப்படும்.
ஒரு பிரிவானது மட்டுமே ஒரு பக்கத்தில், ஒரு தலைப்பகுதியில், அடிப்பகுதி, அடிக்குறிப்பு அல்லது அட்டவணை கலத்தின் உள்ளடக்கமாக இருந்தால் அதனை நீங்கள் மறைக்கக்கூடாது.
பிரிவை மறைக்கக்கூடிய நிபந்தனையை உள்ளிடுக. ஒரு நிபந்தனை என்பது, "திரு போன்ற வணக்கவுரை" ஐப் போல தருக்க வெளிப்பாடு ஆகும். எ.கா, "திரு.", "செல்வி.", "ஐயா" அல்லது "மேடம்" என கொண்டிருக்கும் "வணக்கவுரை" எனும் தரவுத்தள புலத்தை வரையறுக்க அஞ்சல் ஒன்றாக்கு படிவச் சிறப்பியல்பை நீங்கள் பயன்படுத்தினால், வணக்கமுறையில் "திரு" என்றால் மட்டுமே அப்பிரிவு அச்சிடப்படக்கூடியது என்பதை நீங்கள் குறிப்பிட முடியும்.
வேறு எ.காட்டாக "x" புல மாறியை உருவாக்குவது அமையலாம். அதன் மதிப்பை 1 என அமை. பிறகு "x eq 1" போன்ற பிரிவை மறைப்பதற்காக இம்மாறியை நிபந்தனை அடிப்படையானதாய்க் குறிப்பிடவும். நீங்கள் பிரிவைக் காட்சியளிக்க,"x" இலிருந்து "0" மாறிகளுக்கு மதிப்பை அமைக்கவும்.
நடப்பு ஆவணமானது XForms ஆவணமாக இருக்கும்போது நீங்கள் இந்த உரையாடலின் பரப்பைக் காண்பீர்.
ஆவணம் வாசிக்கமட்டும் முறையில் திறக்கப்பட்டிருந்தாலும் கூட பிரிவின் உள்ளடக்கங்களைத் தொகுத்தலை அனுமதிக்க தேர்க.