LibreOffice 7.5 உதவி
உங்கள் ஆவணத்தில் வரையறுத்த பிரிவுகளின் பண்புகளை மாற்றுகிறது. ஒரு பிரிவை நுழைக்க, உரையைத் தேர்க அல்லது உங்கள் ஆவணத்தில் சொடுக்குவதோடு பிறகு நுழை - பிரிவு ஐத் தேர்ந்தெடுக.
பிரிவுகளைத் தொகு உரையாடலானது நுழை- பிரிவுஉரையாடலுடன் ஒத்துள்ளதோடு, பின்வரும் கூடுதல் தேர்வுகளை வழங்குகிறது:
நீங்கள் தொகுக்கவிரும்பும் பிரிவின் பெயரைத் தட்டச்சிடுக, அல்லது பிரிவு பட்டியலில் ஒரு பெயரைச் சொடுக்குக. நடப்பில் இடஞ்சுட்டியானது ஒரு பிரிவில் இருந்தால், பிரிவின் பெயரானது ஆவணச் சாளரத்தின் கீழுள்ள நிலைப்பட்டையின் வலது புறத்தில் காட்சியளிக்கப்படுகிறது.
பிரிவின் நட்ப்பு எழுது பாதுகாப்பு நிலையானது பட்டியலிலுள்ள பிரிவின் பெயரின் முன்னுள்ள பூட்டு குறியீட்டினால் சுட்டப்படுகிறது. திறந்த பூட்டானது பாதுகாப்பின்றியும் பூட்டிய பூட்டானது பாதுகாப்புடனும் உள்ளன. அதேபோல, தென்படும் பிரிவுகள் கண்ணாடி குறியீட்டினால் சுட்டப்படுகின்றது.
தேர்வுகள்உரையாடல் திறக்கிறது, அங்கு நீங்கள் நிரல் தளக்கோலம், பின்புலம், தேர்ந்த பிரிவின் அடிக்குறிப்பு மற்றும் நிறைவுக்குறிப்பின் செயல்பாடுகள் போன்றவற்றைத் தொகுக்கலாம். பிரிவானது கடவுச்சொல்லுடன் பாதுக்காக்கப்பட்டிருந்தால், நீங்கள் கடவுச்சொல் பட்டியலில் கண்டிப்பாக நுழைய வேண்டும்.
ஆவணத்திலிருந்து தேர்ந்த பிரிவை அகற்றுவதோடு, ஆவணத்தினுள் பிரிவின் உள்ளடக்கங்களை நுழைக்கிறது.