LibreOffice 24.8 உதவி
நடப்பு ஆவணத்திலுள்ள தலைப்புரையையும் பின்தொடர் பத்திகளின் எண்ணையும் புதிய தானிச்சுருக்க உரை ஆவணத்தில் நகலெடுக்கிறது.ஒரு தானிச்சுருக்கம் நீண்ட ஆவணங்களின் கண்ணோட்டத்தைப் பெறுவதற்குப் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் திட்டவரை மட்டங்களின் எண்ணிக்கையயும் அத்துடன் அதில் காட்டப்படும் பத்திகளின் எண்ணிக்கையையும் குறிப்பிட முடியும்.அந்தந்த அமைப்புகள் கீழுள்ள அனைத்து மட்டங்களும் பத்திகளும் மறைக்கப்படும்.
புதிய ஆவணத்திற்கு நகலெடுக்கப்படவேண்டிய திட்டவரை மட்டங்களின் நீட்சியை உள்ளிடுக.. எ.கா, நீங்கள் 4 மட்டங்களைத் தேர்ந்தெடுத்தால், தலைப்புரை 1லிருந்து தலைப்புரை 4 வரையுடன் வடிவூட்டப்பட்ட அனைத்துப் பத்திகளும், நிலை உட்புள்ளிகள்இல் குறிப்பிடப்பட்ட அடுத்தடுத்த பத்திகள் எண்ணிக்கையுடன் உள்ளடக்கப்படுகின்றன.
தானிச்சுருக்க ஆவணத்தில் ஒவ்வொரு தலைப்புரைக்கும் பின் உள்ளடக்கப்படவிருக்கும் தொடர்ச்சியான பத்திகளின் அதிகபட்ச எண்ணிக்கையைக் குறிப்பிடுக. அதிகபட்ச வரை வரையறுக்கப்பட்ட அனைத்துப் பத்திகளும் ஒரு தலைப்புரை பாணியுடனான அடுத்த பத்தி வரை உள்ளடக்கப்படுகின்றன.