LibreOffice 24.8 உதவி
அஞ்சல் ஒன்றாக்குஉரையாடலானது, படிவக் கடிதங்களை அச்சிடவும் சேமிக்கவும் உதவுகிறது.
அச்சிடுகையில், தரவுத்தளத் தகவல்கள் ஒத்துப்போகும் தரவுத்தளப் புலங்களை (இடம்பிடிகள்) மாற்றிவைக்கின்றன. தரவுத்தளப் புலங்களை நுழைத்தலைப் பற்றி மேல் விவரங்களுக்கு நுழை - புலங்கள் - மேலும் புலங்கள் கீழுள்ள தரவுத்தளம் கீற்று பக்கத்தில் சரிபார்க்கவும்.
படிவக் கடிதத்தை அச்சிடுவதற்காகப் பதிவுகளின் எண்ணிக்கையை வரையறுக்கிறது. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு கடிதம் அச்சிடப்படும்.
தரவுத்தளத்திலிருக்கும் அனைத்துப் பதிவுகளையும் செய்முறைப்படுத்துகிறது.
தரவுத்தளத்திலிருக்கும் குறித்த பதிவுகளை மட்டும் செய்முறைப்படுத்துகிறது. தேவையான பதிவுகளை நீங்கள் ஏற்கனவே தரவுத்தளத்தில் குறித்திருந்தால் மட்டுமே இத்தேர்வு கிடைக்கப்பெறும்.
அச்சிடவிருக்கும் முதல் பதிவின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
அச்சிடவிருக்கும் கடைசிப் பதிவின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
உங்கள் படிவக் கடிதங்களை ஒரு அச்சுப்பொறிக்கு அனுப்புவதா அவற்றை ஒரு கோப்பில் சேமிப்பதா என்பதை உறுதிபடுத்துகிறது.
படிவக் கடிதங்களை அச்சிடும்.
படிவக் கடிதங்களைக் கோப்புகளில் சேமிக்கும்.
அனைத்துத் தரவுகளின் பதிவுகளைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஆவணத்தை உருவாக்குக.
ஒவ்வொரு தரவுப் பதிவுகளுக்கும் ஓர் ஆவணத்தை உருவாக்குக.
தரவுத்தளத்திலுள்ள தரவுகளிலிருந்து ஒவ்வொரு கோப்பின் பெயரையும் உண்டாக்குக.
தேர்ந்த தரவுத்தளப் புலத்தின் உள்ளடக்கத்தைப் படிவக் கடிதத்திற்கான கோப்பு பெயராகப் பயன்படுத்துகிறது.
படிவக் கடிதங்களைச் சேமிக்க பாதையைக் குறிப்பிடுகிறது.
பாதையைத் தேர் உரையாடலைத் திறக்கிறது.
கிடைக்கப்பெறும் ஆவணத்தில் சேர்த்துவைத்த சேர்த்துவைக்க கோப்பு வடிவூட்டத்தைத் தேர்க.