LibreOffice 25.2 உதவி
விளக்கப்படங்கள், வரைப் பொருள்கள், உரை, பல்லூடகம் மற்றும் பல மற்ற உருப்படிகள் உட்பட காட்டுகின்ற தொழில்நெறியில் காணப்படும் படவில்லையை நீங்கள் உருவாக்க LibreOffice இம்பிரெஸ் அனுமதிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானல், மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் வழங்கல்களை நீங்கள் இறக்குமதி செய்யவும் மாற்றியமைக்கவும் முடியும்.
திரையிடல் படவில்லை காட்சிகளுக்கு, அசைவூட்டம், படவில்லை மாறுநிலை, பல்லூடகம் ஆகியவை உங்களின் வழங்கலை மேலும் நீங்கள் சிறப்பாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய சில உத்திகள் ஆகும்.
LibreOffice வரையில் திசையன் வரைவியல்களை உருவாக்குவதற்கான நிறைய கருவிகள் LibreOffice இம்பிரெஸில் கிடைக்கின்றன.
LibreOffice இம்பிரெஸ் உங்களுக்கு தொழில் நெறியில் காணப்படும் படவில்லைகளை வார்ப்புருக்களுடன் வழங்குகிறது.
You can also assign a number of dynamic effects to your slides, including animation and transition effects.
பல பார்வைகளும் பக்கங்களும் நீங்கள் படவில்லைக் காட்சியை வடிவமைக்கும்போது கிடைக்கும். எ.கா, படவில்லை வரிசைபடுத்தி உங்களின் படவில்லைகளின் மேலோட்டத்தை வில்லைப்படப் படிவத்தில் காட்சியளிக்கிறது, அதே சமயத்தில் கையேடு பக்கமோ நீங்கள் பார்வையாளர்களுக்குப் பகுத்தளிக்க விரும்பும் படவில்லை மற்றும் உரையையும் கொண்டிருக்கிறது.
நீங்கள் படவில்லைக் காட்சியின் நேரத்தை ஒத்திகை பார்க்க LibreOffice இம்பிரெஸ் உதவுகிறது.
நீங்கள் படவில்லைகளைத் திரையிலோ, கைப்பிரதியாகவோ, HTML ஆவணமாகவோ வெளியிடலாம்.
LibreOffice இம்பிரெஸ் நீங்கள் படவில்லைக் காட்சியைத் தானாகவோ கைமுறையாகவோ இயங்குகிற தேர்வினை வழங்குகிறது.