LibreOffice 25.2 உதவி
நீங்கள் படவில்லை உருவாக்குவதில் உங்களுக்கு உதவ, LibreOffice இம்பிரெஸின் இடது மற்றும் மேல் விளிம்புகளிலுள்ள செங்குத்து, கிடைமட்ட அளவுகோல்களை நீங்கள் பயன்படுத்தலாம்.படவில்லையை மூடியிருக்கும் அளவுகோல்களின் பிரிவு வெள்ளை ஆகும்.
நீங்கள் பொருளைத் தேரும்போது, அதன் பரிமாணங்கள் சாம்பல் இரட்டை வரிகளாக அளவுகோல்களில் காட்சியளிக்கப்படுகின்றன. துல்லியமாக பொருளின் மறு அளவீடு செய்ய, அளவுகோலிலுள்ள புது இடத்திற்கு இரட்டை வரிகளில் ஒன்றை இழுக்கவும்.
நீங்கள் ஒரு உரைப் பொருளைத் தேரும்போது, உள்தள்களும் கீற்றுக்களும் கிடைமட்ட அளவுகோலில் காட்சியளிக்கப்படுகின்றன. உரைப் பொருளுக்கான உள்தள்கள் அல்லது கீற்றின் அமைவுகளை மாற்ற விரும்பினால், உள்தளையோ கீற்றையோ அளவுகோலில் ஒரு புதிய இடத்திற்கு இழுக்கவும்.
உங்கள் படவில்லையில் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்கு உதவ பிடி வரி ஐ அளவுகோலிருந்து இழுக்கலாம். ஓர் அளவுகோலைப் பயன்படுத்தி ஒரு பிடி வரியை நுழைக்க, அளவுகோலின் விளிம்பை படவில்லைக்குள் இழுக்கவும்.
அளவுகோலை காட்டுவதற்கும் மறைப்பதற்கும் , பார்வை - அளவுகோல்கள்ஐத் தேர்ந்தெடுக.
ஓர் அளவுகோலுக்கான அளவீட்டு அலகுகளைக் குறிப்பிட, அளவுகோலை வலச் சொடுக்குவதோடு, பிறகு பட்டியலிலிருந்து ஒரு புதிய அலகைத் தேர்ந்தெடுக.
அளவுகோல்களின் (0 point) துவக்கப்புள்ளியை மாற்றுவதற்கு, உயர் இடது மூலையிலுள்ள இரண்டு அளவுகோல்களின் குறுக்கு வெட்டினை பணியிடத்தினுள் இழுக்கவும். செங்குத்து, கிடைமட்ட வழிகாட்டிகள் தோன்றும். புதிய துவக்கம் எங்கு அமையவேண்டுமென நீங்கள் விரும்பும் இடத்தில் செங்குத்து, கிடைமட்டம் வழிகாட்டிகள் வரும் வரையில் இழுப்பதைத் தொடர்ந்து, பிறகு வெளியீடுக. அளவுகோல்களின் துவக்கத்தை முன்னிருப்பு மதிப்புகளுக்கு மீட்டமைக்க, குறுக்கு வெட்டினை இருமுறை சொடுக்குக.
படவில்லை ஓரங்களை மாற்றுவதற்கு, அளவுகோல்களிலுள்ள வெள்ளைப் பரப்புகளின் விளிம்புகளை இழுக்கவும்.