தொலைச் சேவையகங்களில் கோப்புகளைத் திறப்பதும் சேமிப்பதும்

தொலைக் கோப்புகள் சேவை பயனர் வழிகாட்டி

LibreOffice ஆல், தொலைச் சேவையகங்களில் இருக்கும் கோப்புகளைத் திறக்கவும் சேமிக்கவும் முடியும்.தொலைச் சேவையகங்களில் கோப்புகளை வைத்திருப்பது, ஆவணங்களை வெவ்வேறு கணினிகளைப் பயன்படுத்தி வேலை செய்ய அனுமதிக்கிறது. எ.காட்டாக, நீங்கள் அலுவலகத்தில் ஒரு ஆவணத்தில் வேலை செய்யவும் வீட்டில் கடைசி நேர மாற்றங்களுக்குத் தொகுக்க முடியும். தொலைச் சேவையகத்தில் சேமித்து வைக்கும் கோப்புகள், கணினி இழப்பு அல்லது வன்தட்டு தோல்வியிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. சில சேவையகங்களால் கோப்புகளை உள்ளிட, வெளியேற்ற மற்றும் அவற்றின் பயன்பாட்டையும் அணுகலையும் கட்டுப்படுத்தும்.

LibreOffice supports many document servers that use well known network protocols such as WebDAV, Windows share, and SSH. It also supports popular services like Google Drive as well as commercial and open source servers that implement the OASIS CMIS standard.

தொலைக் கோப்பு சேவையுடன் நீங்கள் பணிபுரிய முதலில் ஒரு தொலைக் கோப்பு இணைப்பை அமைக்கவும்.

தொலைக் கோப்பு சேவையில் ஒரு கோப்பைத் திறக்க

  1. பின்வருவனவற்றுள் ஒன்றைச் செய்க:

தொலைக் கோப்புகள் உரையாடல் தோன்றுகிறது.

  1. கோப்பைத் தேர்ந்து திற ஐச் சொடுக்குக அல்லது உள்ளிடு ஐ அழுத்துக.

பிறகு தோன்றும் தொலைக் கோப்புகள் உரையாடல் நிறைய பகுதிகளைக் கொண்டுள்ளது. மேல் பட்டியல் பெட்டியானதுஉரையாடல், நீங்கள் முன்பே வரையறுத்த தொலைச் சேவையகங்களில் பட்டியலைக் கொண்டுள்ளது. பட்டியல் பெட்டிக்கும் கீழேயுள்ள வரியானது, அடைவை அணுகும் பாதையைக் காட்டுகிறது. சேவையகத்தின் இடதில் இருப்பது பயனர் வெளியின் அடைவின் அமைப்பு ஆகும். முதன்மை பலகம் தொலை அடைவிலுள்ள கோப்புகளைக் காட்சியளிக்கிறது.

கோப்புகளை வெளியேற்றுவதும் உள்ளேற்றுவதும்

வெளியேற்றும் உள்ளேற்றும் செயல்கள் ஆவணத்தின் புதுப்பித்தல்களைக் கட்டுப்படுத்துவதுடன் CMIS தொலைச் சேவையிலுள்ள தேவையில்லாத மேலெழுதுக்களைத் தடுக்கிறது.

ஆவணத்திலிருந்து வெளியேறுவது அதனைப் பூட்டுவதுடன்,மற்ற பயனர்கள் மாற்றங்களை உருவாக்காமல் தடுக்கிறது. ஒரே ஒரு பயனர் மட்டுமே எந்த நேரத்திலும் ஒரு குறிப்பிட்ட வெளியேற்றப்பட்ட (பூட்டப்பட்ட) ஆவணத்தைக் கொண்டிருக்க முடியும். ஆவணத்தை உள்ளிடுவதும் வெளியேற்றுவதை ரத்து செய்வதும் ஆவணத்தின்பூட்டைத் திறக்கிறது.

note

There are no checkin/checkout controls for remote files in Windows Shares, WebDAV and SSH services.


CMIS தொலைக் கோப்பு சேவையிலிருந்து ஒரு கோப்பு திறக்கப்படும்போது,மேல் தகவல் பரப்பில் வெளியேற்று பொத்தானை LibreOffice காட்சியளிக்கிறது. மற்ற பயனர் தொகுப்பதிலிருந்து தடுப்பதற்கு சேவையகத்திலுள்ள கோப்பைப் பூட்ட வெளியேற்று பொத்தானைச் சொடுக்கவும். மாற்றாக, கோப்பு - வெளியேற்றுஐச் சொடுக்குக.

ஒரு கோப்பு வெளியேற்றப்படும்போது, LibreOffice ஆனது, சேவையகத்தில் கோப்பின் வேலை நகலை உருவாக்குகிறது (அதோடு கோப்பு பெயரில் (வேலை நகல்) சரத்தை நுழைக்கிறது). ஒவ்வொரு தொகுத்தலும் சேமிக்கும் செயல்பாடும் வேலை நகலில் ஏற்படுகிறது. உங்களுக்கு வேண்டியவாறு எத்தனை முறை வேண்டுமானலும் உங்களின் கோப்பைச் சேமிக்க முடியும். மாற்றங்களை செய்து முடித்தவுடன், கோப்பை உள்ளேற்றவும்.

கோப்பை உள்ளேற்ற, கோப்பு - உள்ளேற்று ஐத் தேர்ந்தெடுக. கடைசி தொகுத்தல் பற்றிய கருத்துரைகளை நுழைக்க, உரையாடல் ஒன்று திறக்கிறது. பதிப்பு கட்டுப்பாடுக்காக CMIS சேவையகத்தில் இக்கருத்துரைகள் படிவு செய்யப்படுகின்றன. ஏற்கனவேயுள்ள கோப்புகளை வேலை நகல் பதிலீடு செய்கிறது. அதன் பதிப்பெண் புதுப்பிக்கப்படுகிறது.

வெளியேற்றுவதைத் தடுக்க, கோப்பு - வெளியேற்றுவதை ரத்து செய் ஐத் தேர்ந்தெடுக. அண்மைய தொகுத்தல் அகற்றப்படும் என்பதை எச்சரிக்கைச் செய்தி தெரிவிக்கும். உறுதி செய்யப்பட்டால், பதிப்பு புதுப்பிப்புகள் ஏற்படாது.

warning

பயன்படுத்திய பிறகு, கோப்பில் உள்ளேற்றுதை நினைவில் கொள்க. அவ்வாறு செய்யாவிடில், கோப்பு பூட்டப்படுவதுடன் மற்ற பயனர் அதனை மாற்றியமைக்க முடியாது.


தொலைக் கோப்பு சேவையில் ஒரு கோப்பைச் சேமிக்க

  1. பின்வருவனவற்றுள் ஒன்றைச் செய்க:

The Remote files dialog appears. Select the remote file server.

  1. வடிகட்டிபட்டியல் பெட்டியில், ஆசைப்பட்ட வடிவூட்டைத் தேர்க.

  2. கோப்புப் பெயர் பெட்டியில் ஒரு பெயரை உள்ளிடவதுடன் சேமி ஐச் சொடுக்குக.

  3. கோப்புடம் வேலை செய்து முடித்தவுடன், அதனை உள்ளேற்றவும். அவ்வாறு செய்ய, கோப்பு - உள்ளேற்று ஐச் சொடுக்குக.

கோப்புகளின் பண்புகள் CMIS சேவையகங்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது

CMIS சேவையகங்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள கோப்புகள் பண்புகள் கொண்டுள்ளன. உள்ளமை சேமிப்பில் மேனிலை தரவு கிடைக்கவில்லை. இந்த மேனிலை தரவுகள் CMIS இணைப்புக்கான கட்டுப்பாடுகளுக்கும் பிழைத்திருத்தங்களுக்கும் சேவையக அமலாக்கத்திற்கும் முக்கியமானதாகும். காட்சியளிக்கப்பட்ட அனைத்து அளவுருக்களும் வாசிக்க மட்டுமே.

கோப்பு - பண்புகள் ஐயும் CMIS கீற்றையும் தேர்ந்தெடுக.

Please support us!