விளக்கப்பட தலைப்புகளைத் தொகுத்தல்

LibreOffice ஆவணத்தினுள் நீங்கல் நுழைத்துள்ள ஒரு விளக்கப்படத்தைத் தொகுக்க:

  1. விளக்கப்படத்தில் இருமுறை சொடுக்கவும்.

    விளக்கப்படத்தைச் சுற்றி ஒரு சாம்பல் எல்லை தோன்றுகிறது. இப்போது பட்டிப்பட்டையானது விளக்கப்படத்திலுள்ள பொருள்களைத் தொகுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

  2. ஏற்கனவேயுள்ள தலைப்பு வரியில் இருமுறை சொடுக்குக. உரையைச் சுற்றி ஒரு சாம்பல் எல்லை தோன்றுகிறது. இப்போது நீங்கள் மாற்றங்களை உருவாக்க முடியும். ஒரு புது வரியை உருவாக்க உள்ளீட்டை அழுத்துக.

    எந்தவொரு தலைப்புகளும் இல்லையெனில், ஓர் உரையாடலில் உரையை உள்ளிட நுழை - தலைப்புகள் ஐத் தேர்ந்தெடுக.

  3. தலைப்புகளில் ஒரு முறை சொடுக்குவதில் நீங்கள் அதனை நகர்த்த அனுமதிக்கிறது.

  4. முதன்மை தலைப்பின் வடிவூட்டலை நீங்கள் மாற்ற விரும்பினால், வடிவூட்டு - தலைப்பு - முதன்மை தலைப்பு ஐத் தேர்ந்தெடுக. இது தலைப்பு உரையாடலைத் திறக்கிறது.

  5. மாற்றங்களை உருவாக்க, உரையாடலில் கிடைக்கும் கீற்றுகளில் ஒன்றைத் தேர்க.

  6. சரி ஐச் சொடுக்குக. உங்கள் ஆவணத்தில், விளக்கப்பட தொகுத்தல் முறையிலிருந்து வெளியேற விளக்கப்படத்தில் வெளியில் சொடுக்குக.

Please support us!