LibreOffice 25.2 உதவி
ஒரு விளக்கப்படத்தைத் தொடங்க வெவ்வேறு வழிமுறைகள் உள்ளன:
கல்க் அல்லது ரைட்டரின் கலங்களிலுள்ள தரவுகள் அடிப்படையில் ஒரு விளக்கப்படத்தை நுழை.
தரவு மூலம் மாறும்போது இந்த விளக்கப்படங்கள் தானாக புதுப்பிக்கப்படுகின்றன.
விளக்கப்படத்தை தரவு அமைவுடன் நுழைப்பதுடன், பிறகு அந்த விளக்கப்படத்திற்கான உங்களின் சொந்த தரவை நுழைக்க தரவு அட்டவணை உரையாடலைப் பயன்படுத்துக.
இந்த விளக்கப்படங்களை ரைட்டர், இம்பிரெஸ், வரை போன்றவைகளில் உருவாக்க முடியும்.
கல்க் அல்லது ரைட்டரிலிருந்து ஒரு விளக்கப்படத்தை மற்றொரு ஆவணத்திற்கு நகலெடுக்கவும்.
இந்த விளக்கப்படங்கள், தரவுகள் நகலெடுக்கையில் அதன் நொடிப்பெடுப்புகள் ஆகும். மூலத் தரவுகள் மாறும்போது அவை மாறுவதில்லை.
கல்க்க்கில், விளக்கப்படம் என்பது நகலெடுத்து அதே ஆவணத்தின் வேறொரு தாளில் ஒட்டக்கூடிய ஒரு தாளின் பொருளாகும். தரவுத் தொடர்களானவை மற்றொரு தாளின் வீச்சில் இணைந்து இருக்கும்.அது மற்றொரு கல்க் ஆவணத்தில் ஒட்டப்பட்டால் எனில், அதற்குச் சொந்த தரவு அட்டவணையைக் கொண்டுள்ளது. அதன் அசல் வீச்சின் இணைப்பில் இல்லை.
உங்கள் விளக்கப்படத்திற்கு வேண்டிய கல வீச்சினுள் சொடுக்குக.
செந்தரம் கருவிப்பட்டையிலுள்ள விளக்கப்படத்தை நுழை இல் சொடுக்குக.
விளக்கப்பட முன்னோட்டத்தையும் வழிகாட்டியையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
விளக்கப்படத்தை உருவாக்க விளக்கப்பட வழிகாட்டி இலுள்ள செயலுறுத்தக் கட்டளையைப் பின்பற்றுக.
ரைட்டர் ஆவணத்தில், ரைட்டர் அட்டவணையின் மதிப்புகள் அடிப்படையில் நீங்கள் ஓர் ஆவணத்தை நுழைக்க முடியும்.
ரைட்டர் அட்டவணையினுள் சொடுக்குக.
நுழை - விளக்கப்படம் ஐத் தேர்ந்தெடுக.
விளக்கப்பட முன்னோட்டத்தையும் வழிகாட்டியையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
விளக்கப்படத்தை உருவாக்க விளக்கப்பட வழிகாட்டி இலுள்ள செயலுறுத்தக் கட்டளையைப் பின்பற்றுக.
முன்னிருப்புத் தரவு அடிப்படியிலான விளக்கப்படத்தை நுழைப்பதற்கு, ரைட்டர், வரை அல்லது இம்பிரெஸ் போன்றவற்றில் நுழை - விளக்கப்படம் ஐத் தேர்ந்தெடுக.
விளக்கப்படத்தில் இருமுறை சொடுக்கவதன் மூலம் நீங்கள் முன்னிருப்புத் தரவுகளை மாற்ற முடியும்.பிறகு,பார்வை - விளக்கப்பட தரவு அட்டவணை தேர்ந்தெடுப்பதிலும் இதைச் செய்யலாம்.