அட்டவணைக்கும் அட்டவணை கலங்களுக்குமான வரையறுக்கும் கலங்கள்

முன்வரையறுத்த எல்லை பாணியை அமைத்தல்

 1. நீங்கள் மாற்றியமைக்க விரும்பும் அட்டவணைக் கலங்களைத் தேர்க.

 2. எல்லைகள் சாளரட்டைத் திறக்க அட்டவணை கருவிப்பட்டையிலுள்ள (ரைட்டர்) எல்லைகள் படவுருவையோ வரியும் நிரப்புதலும் பட்டையையோ சொடுக்குக.

 3. முன்வரையறுத்த எல்லை பாணிகளுள் ஒன்றைச் சொடுக்குக.

  இது தேர்ந்த பாணியை அட்டவணை கலங்களின் நடப்பு எல்லை பாணியில் சேர்க்கிறது. அனைத்து எல்லை பாணிகளையும் துடைக்க எல்லைகள் சாளரத்தின் மேல் இடதிலுள்ள வெற்று எல்லை பாணியைத் தேர்க.

முன்வரையறுத்த எல்லை பாணியை அமைத்தல்

 1. நீங்கள் மாற்றியமைக்க விரும்பும் அட்டவணைக் கலங்களைத் தேர்க.

 2. அட்டவணை - பண்புகள் - எல்லைகள் (ரைட்டர்) அல்லது வடிவூட்டு - கலங்கள் - எல்லைகள் (கல்க்) ஐத் தேர்ந்தெடுக.

 3. பொது தளக்கோலத்தில் தோன்றவேண்டுமென நீங்கள் விரும்பும் விளிம்பு(கள்) ஐ பயனர்-வரையறுத்த பரப்பில் தேர்க. விளிம்பின் தெரிவை நிலைமாற்ற முன்னோட்டத்திலுள்ள விளிம்பின் மேல் சொடுக்குக.

 4. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிரையையோ நிரலையோ தேர்ந்தால், நிரைகளுக்கும் நிரல்களுக்கும் இடையேயுள்ள நடு வரிகளை நீங்கள் மாற்ற முடியும். பயனர்-வரையறுத்த பரப்பிலுள்ள நடு குறிப்பான்களைத் தேர்க.

 5. வரிபரப்பில் தேர்ந்த எல்லைக்கான வரியின் பாணியையும் நிறத்தையும் தேர்க. இந்த அமைவுகள் தேர்ந்த எல்லை பாணியில் உட்படுத்தப்பட்ட அனைத்து எல்லை வரிகளுக்கும் செயற்படுத்தப்படும்.

 6. ஒவ்வொரு எல்லை விளிம்பிற்கும் கடைசி இரண்டு படிகளைத் திரும்பச்செய்க.

 7. எல்லை வரிகளுக்க்கும்நிரப்புதல் பரப்பிலுள்ள பக்க உள்ளடக்களுக்கும் இடையேயுள்ள தூரத்தைத் தேர்க.

 8. மாற்றங்களை செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.

Please support us!