LibreOffice 24.8 உதவி
எல்லையை வரையறுக்க பத்தியில் இடஞ்சுட்டியை வைக்கவும்.
வடிவூட்டு - பத்தி - எல்லைகள் ஐத் தேர்ந்தெடுக.
முன்னிருப்பு பரப்ப்பில் முன்னிருப்பு எல்லை பாணிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்க.
வரி பரப்பில் தேர்ந்த எல்லை பாணிக்கான வரி பாணி, அகலம், நிறம் ஆகியவற்றைத் தேர்க. தேர்ந்த எல்லை பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து எல்லை வரிகளுக்கும் இந்த அமைவுகள் செயலாக்கமாகும்.
எல்லை வரிகளுக்கிடையேயுள்ள தூரத்தையும் நிரப்புதல் பரப்பிலுள்ள பத்தி உள்ளடக்கங்களையும் தேர்க. எல்லை வரி வரையறுக்கப்பட்ட விளிம்பிகள் வரையிலான தூரட்தை மட்டுமே நீங்கள் மாற்ற முடியும் .
மாற்றங்க்ளைச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.
வடிவூட்டு - பத்தி - எல்லைகள் ஐத் தேர்ந்தெடுக.
பொது தளக்கோலத்தில் தோன்றவேண்டுமென நீங்கள் விரும்பும் விளிம்பு(கள்) ஐ பயனர்-வரையறுத்த பரப்பில் தேர்க. விளிம்பின் தெரிவை நிலைமாற்ற முன்னோட்டத்திலுள்ள விளிம்பின் மேல் சொடுக்குக.
வரி பரப்பில் தேர்ந்த எல்லை பாணிக்கான ஒரு வரி பாணி, அகலம், நிறம் ஆகியவற்றைத் தேர்க. இந்த அமைவுகள் யாவும் தேர்ந்த எல்லை பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து எல்லை வரிகளுக்கும் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு எல்லை விளிம்பிற்கும் கடைசி இரண்டு படிகளைத் திரும்பச்செய்க.
எல்லை வரிகளுக்கிடையேயுள்ள தூரத்தையும் நிரப்புதல் பரப்பிலுள்ள பத்தி உள்ளடக்கங்களையும் தேர்க. எல்லை வரி வரையறுக்கப்பட்ட விளிம்பிகள் வரையிலான தூரட்தை மட்டுமே நீங்கள் மாற்ற முடியும்.
மாற்றங்களைச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.