முதல் படி

மாதிரிகளையும் வார்ப்புருக்களையும் பயன்படுத்தி உங்கள் வேலையை எளிமைப்படுத்துவது எப்படி

LibreOfficeபல மாதிரி ஆவணங்களை உள்ளடக்குவதோடு வார்ப்புருக்களைப் பயன்படுத்தவும் தயாராகுகிறது.கோப்பு - புதிய - வார்ப்புருக்கள் ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் இதனை அணுகலாம். அல்லது Shift++N ஐத் அழுத்தலாம்.

நீங்கள் ஏதேனும் ஒரு வார்ப்புருவைத் திறக்கும் போது, புதிய ஆவணம் ஒன்று அந்த வார்ப்புருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும்.

மேலும் வார்ப்புருக்களைத் தேர்வதோடு பதிவிறக்கமும் செய்ய உரையாடலிலுள்ள இணைப்பிலுள்ள வார்ப்புருக்களை உலாவு பொத்தானைச் சொடுக்குக.

உங்களின் சுய வார்ப்புருக்களை உருவாக்குவதற்கு(கோப்பு - வழிகாட்டிகள் பட்டியின் கீழுள்ள) பலவித வழிகாட்டிகளை நீங்கள் பயன்படுத்தலாம், இதனை நீங்கள் மேலும் ஆவணங்களுக்கு அடிப்படையாகப் பயன்படுத்தலாம்.

Please support us!