படிவ வழிகாட்டி - ஓர் உள்படிவத்தை அமை

நீங்கள் உள்படிவத்தைப் பயன்படுத்த விரும்பினால் குறிப்பிடுவதோடு உள்படிவத்தின் பண்புகளை உள்ளிடுக. உள்படிவம் என்பது மற்றொரு படிவத்தில் நுழைக்கப்படுகின்ற படிவமாகும்.

இக்கட்டளையை அணுக...

ஒரு தரவுத்தளக் கோப்பு சாளரத்திலிருக்கும் படிவத்தை உருவாக்க வழிகாட்டியைப் பயன்படுத்து ஐச் சொடுக்குக


உள்படிவத்தைச் சேர்

ஓர் உள்படிவத்தைச் சேர்க்க தேர்க.

உள்படிவம் தற்போதுள்ள தொடர்பின் அடிப்படையிலானது.

தற்போதுள்ள தொடர்பின் அடிப்படையிலான ஓர் உள்படிவத்தைச் சேர்க்க சொடுக்குக.

எந்தத் தொடர்பை நீங்கள் சேர்க்க விரும்புகிறீர்கள்?

உள்படிவம் அடிப்படையாகக் கொண்ட தொடர்பைத் தேர்க.

புலங்களின் கைமுறைத் தெரிவு அடிப்படையிலான உள்படிவம்.

புலங்களின் கைமுறைத் தெரிவு அடிப்படையிலான ஓர் உள்படிவத்தைச் சேர்க்க சொடுக்குக.

படிவ வழிகாட்டி - உள்படிவப் புலங்களைச் சேர்

Please support us!