அகவரிசை - உதவியிலுள்ள திறவுச்சொல் தேடல்

ஒரு சொல்லை தேடல் சொல்கூறு உரைப் பெட்டியில் தட்டச்சிடுவதன் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தேட முடியும். அகவரிசை சொல்கூறுகளின் அகர வரிசைச் சார்ந்த பட்டியலை சாளரம் கொண்டிருக்கிறது.

நீங்கள் தேடல் சொல்கூற்றை தட்டச்சிடும்போது இடஞ்சுட்டி அகவரிசை பட்டியலில் இருந்தால், காட்சியானது நேரடியாக அடுத்த பொருத்தத்திற்கு குதிக்கும். தேடல் சொல்கூறு என உரைப் பெட்டியில் நீங்கள் தட்டச்சிடும்போது, குவியம் அகவரிசை பட்டியலில் சிறந்த பொருத்தத்திற்குக் குதிக்கிறது.

Tip Icon

அகவரிசையும் முழு-உரை தேடலும் எப்போதும் நடப்பில் தேர்ந்த LibreOffice செயலிக்குச் செயல்படுத்தப்படும். உதவி பார்வையர் கருவிப்பட்டையிலுள்ள பட்டியல் பெட்டியைப் பயன்படுத்தி தக்க செயலியைத் தேர்க.


Please support us!