LibreOffice 24.8 உதவி
வரைதல் பட்டையைத் திறக்கவோ மூடவோ சொடுக்குக, நடப்பு ஆவணத்திற்கான வடிவங்கள், வரிகள், கூவல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
செந்தரக் கருவிப்பட்டையிலுள்ள படவுருவைப் பயன்படுத்தி ரைட்டர் மற்றும் கல்க் ஆவணங்களின் வரைதல் கருவிப்பட்டையை திறக்க/அடைக்க முடியும்.
வரைதலுக்கான செயலாற்றிகளைக் காட்டு
கருவிப்பட்டையில் தென்படுகிற பொத்தான்களை நீங்கள் மாற்றலாம். தென்படும் பொத்தான்கள் கட்டளையை அணுக கருவிப்பட்டையை வலம் சொடுக்குக.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் பொருள்களைத் தேர அனுமதிக்கிறது. ஒரு பொருளைத் தேர, அம்பைக் கொண்டு பொருளைச் சொடுக்குக. ஒன்றுகும் மேற்பட்ட பொருள்களைத் தேர, ஒரு தெரிவுச் சட்டகத்தைப் பொருள்களைச் சுற்றி இழுக்கவும். தெரிவில் ஒரு பொருளைச் சேர்க்க, shift ஐ அழுத்தி, பிறகு பொருளைச் சொடுக்கவும்.
ஒரு வரியில் உரையை உள்ளிட, வரியை இருமுறை சொடுக்குவதுடன் உங்களின் உரையைத் தட்டச்சிடவோ ஒட்டவோ செய்க. உரையின் திசையானது நீங்கள் வரியை வரைவதற்கு இழுத்த திசையோடு சார்ந்திருக்கிறது. வரியை மறைக்க, வரை பொருள் பண்புகள் பட்டையின் மீதுள்ள வரி பாணி இலுள்ள தென்படா ஐத் தேர்க.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்குமிடத்தில் ஒரு நிரப்பிய செவ்வகத்தை வரைகிறது. செவ்வகத்தின் மூலையை நீங்கள் வைக்கவிருக்கும் இடத்தில் சொடுக்குவதோடு, உங்களுக்கு வேண்டிய அளவுக்கு அதனை இழுக்கவும். ஒரு சதுரத்தை வரைய, நீங்கள் இழுக்கும்போது Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும்.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுத்த இடத்தில் ஒரு முட்டை வடிவத்தை வரைகிறது. முட்டை வடிவத்தை நீங்கள் வரையப்போகும் இடத்தில் சொடுக்குவதோடு, நீங்கள் விரும்பும் அளவிற்கு இழுக்கவும். ஒரு சதுரத்தை வரைய, இழுக்கும்போதே Shiftஐ அழுத்தி வைத்திருக்கவும்.
நேர் வரி பாகங்களின் தொடராலான ஒரு வரியை வரைகிறது. ஒரு வரி பாகத்தை வரைய இழுக்கவும், வரி பாகத்தின் முடுவுப் புள்ளியை வரையறுக்க சொடுக்க்கவும், பிறகு ஒரு புது வரி பாகத்தை வரைய இழுக்கவும். வரியை வரைதலை முடிக்க இருமுறை சொடுக்கவும். மூடிய வடிவத்தை உருவாக்க, வரியின் ஆரம்பப் புள்ளியை இருமுறை சொடுக்கவும்.
புதுப் புள்ளிகளை 45 பாகைக் கோணங்களில் நிலைநிறுத்த, பலகோணத்தை வரையும்போது shift விசையை அழுத்திருக்கவும்.
புள்ளிகளைத் தொகு முறையானது, நீங்கள் பலகோணத்தின் தனித்தனிப் புள்ளிகளை ஒன்றோடொன்றாக மாற்றியமைக்க அனுமதிக்கிறது.
ஒரு வழுவழுப்பான பெசியர் வளைவை வரைகிறது.நீங்கள் வளைவைத் தொடங்க, இழுக்க, விடவிருக்கும் இடத்தில் சொடுக்குவதுடன் வளைவை முடிக்கவிருக்கும் இடத்திற்குச் சுட்டியை நகர்த்தி சொடுக்க்குக. சுட்டியை நகர்த்துவதுடன் வளைவிற்கு ஒரு நேர் வரிக்கூற்றைச் சேர்ப்பதற்கு மீண்டும் சொடுக்குக. வளைவு வரைவதை நிறுத்த இருமுறை சொடுக்கவும். மூடிய வடிவத்தை உருவாக்க, வலைவின் தொடக்கப் புள்ளியை இருமுறை சொடுக்கவும். வளைவின் வில்லானது நீங்கள் இழுக்கும் தூரத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
நடப்பு ஆவணத்தில் ஒரு வில்லை வரைகிறது. ஒரு வில்லை வரைய, ஒரு முட்டை வடிவத்தை நீங்கள் விரும்பும் அளவிற்கு இழுத்து பிறகு வில்லின் தொடக்கப் புள்ளியை வரையறுக்க சொடுக்கவும். நீங்கள் முடிவுப்புள்ளியை வைக்கவிரும்பும் இடத்தில் உங்களின் சுட்டியை நகர்த்தி சொடுக்குக. முட்டை வடிவில் நீங்கள் சொடுக்க வேண்டியதில்லை. வட்ட வடிவ அடிப்படையில் ஒரு வில்லை வரைய, இழுக்கும்போதே Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும்.
நடப்பு ஆவணத்திலுள்ள ஒரு முட்டை வடிவ மற்றும் இரு ஆரங்களின் வரிகளால் வரையறுக்கப்பட்ட ஒரு நிரப்பப்பட்ட வடிவத்தை வரைகிறது.ஒரு நீள் வட்ட துண்டினை வரைய, நீங்கள் விரும்பும் அளவில் முட்டை வடிவத்தை இழுத்து, முதல் ஆர வரியை வரையறுக்க சொடுக்கவும். முட்டை வடிவத்தின் மேல் நீங்கள் சொடுக்க வேண்டியத்தில்லை. ஒரு வட்ட துண்டினை வரைய, இழுக்கும்போதே Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும்.
நடப்பு ஆவணத்திலுள்ள ஒரு வட்டத்தின் வில் மற்றும் ஒரு விட்ட வரியினால் வரையறுக்கப்பட்ட ஒரு நிரப்பப்பட்ட வடிவத்தை வரைகிறது. ஒரு வட்ட பகுதியினை வரைய, நீங்கள் விரும்பும் அளவில் வட்டத்தை இழுத்து, பிறகு விட்ட வரியின் தொடக்கப் புள்ளியை வரையறுக்க சொடுக்கவும். விட்ட வரியின் முடிவுப்புள்ளியை நீங்கள் வக்க விரும்பும் இடத்திற்குச் சுட்டையை நகர்த்தவும். வட்டத்தின் மேல் நீங்கள் சொடுக்க வேண்டியத்தில்லை. ஒரு நீள் வட்ட பகுதியினை வரைய, இழுக்கும்போதே Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும்.
தேர்ந்த பொருள்களுக்கான 3D விளைவுகளைத் திறப்பதையும் அடைப்பதையும் வழிமாற்றுகிறது.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுப்பதிலிருந்து செங்குத்து திசையில் செவ்வகவியலான குறிப்பறையில் முடிவுறும் ஒரு கோட்டை வரைகிறது. குறிப்பறையின் அளவை மாற்ற குறிப்பறையின் கைப்பிடியை இழுக்கவும். உரையைச் சேர்க்க, குறிப்பறையின் விளிம்பைச் சொடுக்கவும், பிறகு உங்களின் உரையை தட்டச்சிடுக அல்லது ஒட்டுக. செவ்வகவியலான குறிப்பறையை வட்டமாக்க, சுட்டி கையாக மாறும்போது பெரிய மூலையின் பிடியை இழுக்கவும். ஆசியான் மொழி செயலாக்கப்பட்டால் மட்டுமே கிடைக்கும்.
ஆவணத்தில் நீங்கள் சொடுக்கும் அல்லது இழுக்கும் இடத்தில் செங்குத்து உரை திசையுடன் ஒரு உரைப் பெட்டியை வரைகிறது. ஆவணத்தில் எங்குவேண்டுமாணாலும் சொடுக்குக, பிறகு உங்களின் உரையைத் தட்டச்சிடுக அல்லது ஒட்டுக. நீங்கள் உரையைச் சேர்க்க விரும்பும் இடத்திற்கும் இடஞ்சுட்டியை நகர்த்தலாம், ஓர் உரைப்பெட்டியை இழுக்கவும், பிறகு உங்களின் உரையைத் தட்டச்சிடுக அல்லது ஒட்டுக. ஆசியான் மொழி ஆதரவு செயலாக்கப்பட்டால் மட்டுமே கிடைக்கும்.