LibreOffice 25.2 உதவி
Edit a pivot chart in the same way as normal charts.
பொருள் பண்புகளைத் தொகுக்க ஒரு விளக்கப்படத்தைச் சொடுக்குக:
நடப்பு ஆவணத்திலுள்ள அளவும் இடமும்.
சீரமைப்பு, உரை மடிப்பு, வெளி எல்லைகள் மற்றும் பல.
விளக்கப்படத் தொகு முறையில் உள்ளிட ஒரு விளக்கப்படத்தை இருமுறை சொடுக்குக:
விளக்கப்படத் தரவு மதிப்புகள் ( சுய தரவு கொண்டிருக்கும் விளக்கப்படங்களுக்கு).
விளக்கப்பட வகை, கோடரிகள், சுவர்கள் மற்றும் பல.
விளக்கப்படத் தொகு முறையிலுள்ள ஒரு விளக்கப்படத் தனிமத்தை இருமுறை சொடுக்குக:
ஒப்பளவு, வகை மற்றும் மேலும் பலவற்றைத் தொகுக்க அச்சை இருமுறை சொடுக்குக.
தரவுப் புள்ளிகள் சார்ந்த தரவுப் புள்ளித் தொடர்களைத் தேர்தெடுப்பதோடு தரவுப் புள்ளிகளுக்குச் சொந்தமான தரவுத்தொடர்களைச் சொடுக்குக.
தேர்ந்த தரவுத் தொடர்களுடன், சொடுக்குக, பிறகு இந்தத் தரவுப் புள்ளியைத் (எ.கா, ஒரு விளக்கப்படப் பட்டியிலுள்ள ஒற்றைப் பட்டை) தொகுக்க ஒற்றைத் தரவுப் புள்ளியை இருமுறை சொடுக்குக.
குறி விளக்கத்தைத் தேரவும் தொகுக்கவும் குறி விளக்கதை இருமுறை சொடுக்குக. சொடுக்குக, பிறகு தொடர்புடைய தரவுத் தொடர்களைத் தொகுக்க தேர்ந்த குறி விளக்கத்திலுள்ள ஒரு குறியீட்டை இரட்டைச் சொடுக்குக.
வேறு எந்தவொரு விளக்கப்படத் தனிமத்தையும் இருமுறை சொடுக்குக, அல்லது பண்புகளைத் தொகுக்க, தனிமத்தைச் சொடுக்குவதோடு வடிவூட்டுப் பட்டியைத் திறக்கவும்.
நடப்புத் தொகு முறையிலிருந்து வெளியேற விளக்கப்படத்தின் வெளிப்புறத்தில் சொடுக்குக.
உயர் தரத்தில் ஒரு விளக்கப்படத்தை அச்சிட, நீங்கள் விளக்கப்படத்தை PDF கோப்புக்கு ஏற்றுமதிசெய்து அக்கோப்பை அச்சிடலாம்.
விளக்கப்படத் தொகு முறையில், ஆவணத்தின் மேல் எல்லையின் அருகில் விளக்கப்படங்களுக்கான வடிவூட்டல் பட்டை ஐ நீங்கள் பார்க்கலாம். ஆவணத்தின் கீழ் எல்லையின் அருகில் விளக்கப்படங்களுக்கான வரைதல் பட்டை தோன்றுகிறது. வரைதல் அல்லது இம்பிரெஸின் வரைதல் கருவிப்பட்டையிலுள்ள படவுருக்களின் ஒரு துணைத்தொகுப்பை வரைதல் கருவிப்பட்டை காட்டுகிறது.
சூழல் பட்டியைத் திறக்க விளக்கப்படத்தின் ஒரு தனிமத்தை நீங்கள் வலச் சொடுக்கலாம். சூழல் பட்டியானது தேர்ந்த தனிமத்தை வடிவூட்டுவதற்கான நிறைய கட்டளைகளை அளிக்கிறது.