உள்ளடக்கங்களை அழித்தல்

இயக்கத்திலுள்ள கலத்திலிருந்தோ தேர்ந்த கல வீச்சிலிருந்தோ அழிக்கப்படக்கூடிய உள்ளடக்கங்களைக் குறிப்பிடுகிறது. பல தாள்கள் தேர்வு செய்யப்பட்டால், அனைத்துத் தேர்ந்த தாள்களும் பாதிக்கப்படும்.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Clear Cells.

பின்வாங்கு


Tip Icon

தாளில் கல இடஞ்சுட்டியானது செயல்படுத்தப்பட்டப் பிறகு பின்வாங்குவெளியை அழுத்துவத்ன் மூலம் இந்த உரையாடல் அழைக்கப்படுகிறது.


Tip Icon

அழியை அழுத்துதல், உரையாடலை அழைக்காமலோ வடிவூட்டலை மாற்றாமலோ உள்ளடக்கங்களை அழிக்கிறது.


Tip Icon

உரையாடலின்றி உள்ளடக்கங்களையும் வடிவூட்டல்களையும் அழிப்பதற்கு செந்தரப் பட்டையிலுள்ள வெட்டு ஐப் பயன்படுத்துக.


தெரிவு

இந்தப் பரப்பானது உள்ளடக்கங்களை அழித்தலுக்கான தேர்வுகளைப் பட்டியலிடுகிறது.

அனைத்தையும் அழி

தேர்ந்த கல வீச்சிலிருந்து அனைத்து உள்ளடக்கங்களையும் அழிக்கிறது.

உரை

உரையை மட்டும் அழிக்கிறது. வடிவூட்டல்கள், சூத்திரங்கள், எண்கள் மற்றும் தேதிகள் பாதிக்கப்படுவதில்லை.

எண்கள்

எண்களை மட்டும் அழிக்கிறது. வடிவூட்டல்கள், சூத்திரங்கள் யாவும் மாறாமல் இருக்கும்.

தேதி & நேரம்

தேதி, நேர மதிப்புகளை அழிக்கிறது. வடிவூட்டல்கள், உரை, எண்கள் மற்றும் சூத்திரங்கள் யாவும் மாறாமல் இருக்கும்.

சூத்திரங்கள்

சூத்திரங்களை அழிக்கிறது. உரை, எண்கள், வடிவூட்டல்கள், தேதிகள் மற்றும் நேரங்கள் யாவும் மாறாமல் இருக்கும்.

கருத்துரைகள்

கலத்திற்குச் சேர்த்த கருத்துரைகளை அழிக்கிறது. மற்ற தனிமங்கள் யாவும் மாறாமல் இருக்கும்.

வடிவூட்டல்கள்

கலங்களுக்குச் செயலாக்கப்பட்ட வடிவூட்டுத் தன்மைகளை அழிக்கிறது. அனைத்துக் கலஉள்ளடக்கங்களும் மாறாமல் இருக்கும்.

பொருள்கள்

பொருள்களை அழிக்கிறது. அனைத்துக் கல உள்ளடக்கங்களும் மாறாமல் இருக்கும்.

Please support us!