LibreOffice 24.8 உதவி
அடிப்படை உரையாடல் கோப்பை இறக்குமதிசெய்ய "திற" உரையாடலை அழைக்கிறது.
இறக்குமதியான உரையாடல் ஏற்கனவே நூலகத்தில் உள்ளதைப்போலவே பெயர் கொண்டிருந்தால், நீங்கள் இறக்குமதி செய்த உரையாடலை மறுபெயரிட தீர்மானம் செய்வதற்கான ஒரு செய்தி பெட்டியை நீங்கள் காண்பீர்கள். இந்த வழக்கில், உரையாடலானது ஒரு புதிய உரையாடலை உருவாக்குகையிலுள்ள பெயரைப்போல அடுத்துள்ள கட்டற்ற "தானியங்கி" பெயருக்கு மறுபயரிடப்படும். நீங்கள் ரத்தைச் சொடுக்கினால் உரையாடல் இறக்குமதி செய்யப்படாது.
உரையாடல்கள் உள்ளூர்மயமாக்கல் தரவைக் கொண்டிருக்கலாம். உரையாடலை இறக்குமதி செய்யும்பொழுது, உரையாடல் உள்ளூர்மயமாக்கல் நிலையில் பொருந்தாமை ஏற்படலாம்.
இறக்குமதியான உரையாடலுடன் ஒப்பிடுகையில் நூலகம் கூடுதல் மொழிகளைக் கொன்டிருந்தால், அல்லது இறக்குமதியான உரையாடல் அனைத்தும் உள்ளமைக்கப்படவில்லையென்றால், கூடுதல் மொழிகள் உரையாடலின் முன்னிருப்பு உள்ளமை சரங்களைப் பயன்படுத்தி அமைதியாக இறக்குமதியான உரையாடலில் சேர்க்கப்படும்.
நூலகத்தோடு ஒப்பிடுகையில் இறக்குமதியான உரையாடலில் கூடுதல் மொழிகள் இருந்தாலோ, நூலகம் உள்ளமைக்கப்படாமல் இருந்தாலோ, நீங்கள் சேர், விட்டுவிடு, ரத்து ஆகிய பொத்தான்களைச் செய்தி பெட்டியில் காண்பீர்கள்.
சேர்: இறக்குமதியான உரையாடலிருந்து கூடுதல் மொழிகள் ஏற்கனவே உள்ள உரையாடலில் சேர்த்துக்கொள்ளப்படும். நூலகத்தின் முன்னிருப்பு மொழியிலிருந்து மூலங்கள் புதிய மொழிகளுக்குப் பயன்படுத்தப்படும். இந்த மொழிகளைக் கைமுறையாக நீங்கள் சேர்ப்பதும் இதே போன்றுதான்.
விட்டுவிடு: நூலகத்தின் மொழி அமைவுகள் தொடர்ந்து மாறாமல்தான் இருக்கும். விடுபட்ட மொழிகளுக்கான இறக்குமதியான உரையாடலின் மூலங்கள் உரையாடலினுள் நகலெடுக்கப்படவில்லை, ஆனால் அவை இறக்குமதியான உரையாடலின் மூலக் கோப்புகளில் நிலைத்திருக்கின்றன.
உரையாடலை இறக்குமதிசெய்