உரையாடல் தொகுப்பியிலுள்ள கட்டுப்பாடுகளின் மொழிப்பெயர்ப்பு

அடிப்படை IDE உரையாடல் தொகுப்பியிலுள்ள மொழிக் கருவிப்பட்டை, உள்ளமைக்கக்கூடிய உரையாடல்களைச் செயல்படுத்தும் நிர்வகிக்கும் கட்டுப்பாடுகளைக் காட்டுகிறது.

ஒரு மொழிக்கான சர மூலங்களை மட்டும் கொண்டுள்ள நீங்கள் உருவாக்கிய எந்தவொரு உரையாடலும் முன்னிருப்பில் இருக்கும். பயனரின் மொழி அமைவுகளின் அடிப்படையில் உள்ளமைத்த சரங்களைத் தானாகவே காட்டும் உரையாடல்களை நீங்கள் உருவாக்கலாம்.

உள்ளமைக்கூடிய உரையாடல்களைச் செயலாக்க

 1. Basic IDE உரையாடல் தொகுப்பியில், பார்வை - கருவிப்பட்டைகள் - மொழி ஐத் தேர்ந்து மொழிக் கருவிப்பட்டையைத் திறக்கவும்.

  நடப்பு நூலகம் ஏற்கனவே உள்ளமைக்கக்கூடிய உரையாடலைக் கொண்டிருந்தால்,மொழிக் கருவிப்பட்டை தானாகக் காட்டப்படும்.

 2. Click the Manage Languages iconManage Language icon on the Language toolbar or on the Toolbox bar.

  பயனர் முகப்பு மொழி உரையாடலை நீங்கள் காண்கிறீர்கள். இவ்வுரையாடல் நடப்பு நூலகத்திற்கான மொழிகளை நிர்வகிக்கிறது. நடப்பு நூலகத்தின் பெயர் தலைப்புப் பட்டையில் காட்டப்படுகிறது.

 3. ஒரு மொழி உள்ளீட்டைச் சேர்க்க உரையாடலில் சேரைச் சொடுக்குக.

  இந்தப் படி அனைத்துப் புதிய உரையாடல்களையும் உள்ளமை சர வளங்களைச் கொண்டிருக்க செயல்படுத்துகிறது.

 4. முதன்முதலாக நீங்கள் சேர் ஐச் சொடுக்கும்பொழுது, முன்னிருப்புப் பயனர் முகப்புமொழி உரையாடல் அமைவைக் காண்கிறீர்கள். அதன் பிறகு நீங்கள் நேரங்களில் சேர் ஐச் சொடுக்குகையில், இந்த உரையாடல் பயனர் முகப்பு மொழி சேர் எனும் பெயரைக் கொண்டிருக்கும்.

  பயனர் முகப்பு மொழி உரையாடல் நிர்வகித்தலிலும் முன்னிருப்பு மொழியை மாற்றலாம்.

 5. ஒரு மொழியைத் தேர்க.

  உரையாடல் பண்புகளின் அனைத்துச் சரங்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளைக் கொண்டிருப்பதற்கு சர மூலங்களைச் சேர்க்கிறது. முன்னிருப்பு மொழியின் உரையாடல் சரங்களின் ஒரு தொகுதி புதிய சரங்களின் தொகுதிக்கு நகலெடுக்கப்படுகிறது. பிறகு, நீங்கள் ஒரு புது மொழிக்கு மாறவும் அதன்பின் சரங்களை மொழிபெயர்க்கவும் முடியும்.

 6. உரையாடலை மூடுக அல்லது கூடுதல் மொழிகளைச் சேர்க.

உங்கள் உரையாடலிலுள்ள உள்ளமை கட்டுப்பாடுகளைத் தொகுக்க

உங்கள் உரையாடலிலுள்ள உள்ளமை சரங்களுக்கான வளங்களை நீங்கள் சேர்த்துவிட்டால், மொழிக் கருவிப்பட்டையிலுள்ள நடப்பு மொழிப்பட்டியல் பெட்டியிலிருந்து நடப்பு மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

 1. முன்னிருப்பு மொழியைக் காட்ட நடப்பு மொழிப்பட்டியல் பெட்டியை வழிமாற்று.

 2. உங்கள் உரையாடலில் எத்தனை எண்ணிக்கையிலான கட்டுப்பாடுகளையும் நுழைப்பதோடு உங்களுக்கு வேண்டிய அனைத்துச் சரங்களையும் உள்ளிடுக.

 3. நடப்பு மொழிப்பட்டியல் பெட்டியில் மற்றொரு மொழியைத் தேர்க.

 4. கட்டுப்பாட்டு பண்பு உரையாடல்களைப் பயன்படுத்தி, அனைத்துச் சரங்களையும் வேறொரு மொழிக்குத் தொகுக்கவும்.

 5. நீங்கள் சேர்த்த அனைத்து மொழிகளுக்கும் திரும்பச்செய்க.

பயனரின் LibreOffice பதிப்பின், பயனர் இடைமுகப்பு சரங்களை உங்கள் உரையாடலின் பயனர் பார்ப்பார், நீங்கள் அம்மொழியில் சரங்களை வழங்கிருந்தால்.

பயனர் பதிப்பினுடன் எந்த மொழியும் பொறுந்தவில்லையாயின், முன்னிருப்பு மொழியின் சரத்தினைப் பயனர் காண்பார்.

அடிப்படை உரையாடல்களுக்கான உள்ளமை சர மூலங்களை அறியாத LibreOffice இன் பழைய பதிப்பைப் பயனர் கொண்டிருந்தால், முன்னிருப்பு மொழி சரங்களைப் பயனர் காண்பார்.

Please support us!