பின்புல நிறங்களையும் பின்புல வரைவியல்களையும் வரையறுத்தல்
நீங்கள் ஒரு பின்புல நிறத்தை வரையறுக்கவோ LibreOffice ரைட்டரிலுள்ள பல்வேறு பொருள்களுக்கு வரைவியயைப் பின்புலமாக பயன்படுத்தவோ முடியும்.
உரை வரியுருக்களுக்கு ஒரு பின்புலத்தைச் செயல்படுத்த
-
வரியுருக்களைத் தேர்க.
-
வடிவூட்டு - வரியுரு ஐத் தேர்ந்தெடுக.
-
பின்புலம் கீற்றைச் சொடுக்குக, பின்புல நிறத்தைத் தேர்க.
ஒரு பத்திக்குப் பின்புலத்தைச் செயல்படுத்த
-
பத்தியில் இடஞ்சுட்டியை வைக்கவும் அல்லது பல பத்திகளைத் தேரவும்.
-
வடிவூட்டு - பத்தி ஐத் தேர்க.
-
பின்புலம் கீற்று பக்கத்தில், பின்புல நிறம் அல்லது பின்புல வரைவியலைத் தேர்க.
பின்புலத்தில் பொருளைத் தேர்வதற்கு, கட்டளைCtrlவிசையைக் கீழ் வைத்திருப்பதோடு பொருளைச் சொடுக்குக. மாற்றாக, பொருளைத் தேர்வதற்கு மாலுமியைப் பயன்படுத்துக.
அட்டவணை அனைத்துக்கும் அல்லது அட்டவணையின் ஒரு பகுதிக்குப் பின்புலத்தைச் செயல்படுத்த
-
உங்களின் உரை ஆவணத்திலுள்ள அட்டவணையினுள் இடஞ்சுட்டியை வைக்கவும்.
-
Choose Table - Properties.
-
பின்புலம் கீற்று பக்கத்தில், பின்புல நிறம் அல்லது பின்புல வரைவியலைத் தேர்க.
-
க்கானபெட்டியில், நடப்புக் கலத்திற்கோ, நடப்பு நிரைக்கோ முழு அட்டவணைக்கோ நிறத்தையா வரைவியலையா செயல்படுத்தவேண்டும் என்பதைத் தேர்க. உரையாடலைத் திறப்பதற்கு முன் நீங்கள் பல கலங்களையும் நிரைகளையும் தேர்ந்தால், மாற்றம் தெரிவில் செயல்படுத்தப்படுகிறது.
அட்டவணைப் பகுதிகளுக்குப் பின்புலத்தைச் செயல்படுத்த நீங்கள் ஒரு படவுருவையும் பயன்படுத்தலாம்.
-
கலங்களுக்குப் பின்புல நிறத்தைச் செயல்படுத்த, கலங்களைத் தேர்வதோடு பின்புல நிறம் கருவிப்பட்டையிலுள்ள நிறத்தைச் சொடுக்குக.
-
கலங்களுக்கிடையேயுள்ள உரைப்பத்திக்கு பின்புல நிறத்தைச் செயல்படுத்த, உரைப் பத்தியுனுள் இடஞ்சுட்டியை வைத்து, பிறகு
கருவிப்பட்டையிலுள்ள நிறத்தைச் சொடுக்குக.