தானியக்க URL அடையாளங்காணலை அடைத்தல்

நீங்கள் உரையை உள்ளிட்டால், LibreOffice தானகவே URLஆக இருக்கக்கூடும் ஒரு சொல்லை அங்கீகரிப்பதுடன் சொல்லை ஓர் மீத்தொடுப்புடன் மாற்றி வைக்கிறது. LibreOffice ஆனது, சில வரியுரு பாணிகளிலிருந்து பெறப்பட்ட பண்புகளின் நேரடி எழுத்துரு தன்மையைக் கொண்டிருக்கும் மீத்தொடுப்பை வடிவூட்டுகிறது.

நீங்கள் தட்டச்சிட்டவாறு LibreOffice தானாகவே URL ஐக் கண்டறிதல் உங்களுக்கு வேண்டாமென்றால், இந்தச் சிறப்பியல்பை அடைக்க பல வழிகள் உள்ளன.

URL கண்டறிதலை செயல்நீக்கு

  1. நீங்கள் தட்டச்சிடும்போது, உரையானது தானாகவே மீத்தொடுப்பாக நிலைமாறுவதை நீங்கள் கவனித்தால்,இந்த வடிவூட்டை செயல்நீக்க +Z ஐ அழுத்தவும்.

  2. பின்னரும் இந்த மாற்றத்தை நீங்கள் கவனிக்கவில்லை என்றால்,மீத்தொடுப்பைத் தேர்ந்து, சூழல் பட்டியைத் திறப்பதுடன் மீத்தொடுப்பை அகற்று ஐத் தேர்ந்தெடு.

URL கண்டறிதலை அடை

  1. URL கண்டறிதலை மாற்றியமைக்க உங்களுக்குவேண்டிய வகை ஆவணத்தை ஏற்றுகிறது.

    உரை ஆவணங்களுக்கான URL கண்டறிதலை நீங்கள் மாற்றியமைக்க விரும்பினால், ஒரு உரை ஆவணத்தைத் திறக்கவும்.

  2. கருவிகள் - தானிதிருத்தம் - தானிதிருத்த தேர்வுகள்.

  3. தானிதிருத்தம் உரையாடலில், தேர்வுகள் கீற்றைத் தேர்க.

  4. URL கண்டறிதல் ஐ நீங்கள் குறிநீக்கம் செய்தால், அதன் பின்னர் சொற்கள் தானகவே மீத்தொடுப்புகளுடன் மாற்றிவைக்கப்படாது.

    LibreOffice ரைட்டரில் URL அறிதல் லின் முன் இரண்டு தேர்வுப் பெட்டிகள் உள்ளன. முதல் நிரலிலுள்ள பெட்டியானது பின்னரில் பிந்தைய - தொகுப்பதற்கும் இரண்டாம் நிரலானது நீங்கள் தட்டச்சடிப்பதுபோல தன்னியக்கச் சரிபார்ப்பதற்கு ஆகும்.

Please support us!