கண்டறி - முழு-உரை தேடல்

LibreOffice உதவியிலுள்ள முழு உரைத் தேடல் நீங்கள் தேடல் சொற்கூகளின் எந்தவொரு ஒருங்கிணைப்பையும் கொண்ட உதவி ஆவணங்களைக் கண்டறிய அனுமதிக்கிறது. இதனைச் செய்ய, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சொல்களை தேடல் சொல்கூறு உரைப் புலத்தினுள் தட்டச்சிடுக.

தேடல் சொல்கூறு உரைப் புலம் நீங்கள் கடைசியாக உளிட்ட சொற்களைச் சேமிக்கிறது. முந்தைய தேடலைத் திரும்பச்செய்ய, அம்பு படவுருவைச் சொடுக்குவதோடு பட்டியலிலிருந்து சொல்கூறைத் தேர்க.

தேடலுக்குப் பிறகு, முடிவுகளின் ஆவணத் தலைப்புரைகள் ஒரு பட்டியலில் தோன்றும். உள்ளீட்டை இருமுறை சொடுக்குவதோ அல்லது அதனை தேர்ந்து தொடர்புடைய உதவி ஆவணத்தை ஏற்றுவதற்கு காட்சி ஐச் சொடுக்குக.

தலைப்புரயில் மட்டும் கண்டறி தெரிவுப் பெட்டியை ஆவணத் தலைப்புரைகளைத் தேடலை வரம்புக்குள் வைக்க.

முழுமை சொல் மட்டும்தெரிவுப் பெட்டி உங்களை ஒரு சரியான தேடலைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. இந்தப் பெட்டி குறிக்கப்பட்டால், முழுமையற்ற சொற்களைக் காண முடியாது.நீங்கள் உள்ளிடும் தேடல் சொல்கூறு ஒரு நீண்ட சொல்லின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்றால் இந்தத் தெரிவுப் பெட்டியைக் குறிக்க வேண்டாம்.

தேடல் சொற்கூறுகளின் எந்தவொரு ஒருங்கிணைப்பையும் நீங்கள் உள்ளிடலாம். தேடல் ஒரு வகையுணரி அல்ல.

Tip Icon

அகவரிசை, முழு-உரை ஆகியவற்றின் தேடல்கள் எப்போதும் நடப்பில் தேர்ந்த LibreOffice செயலிக்குச் செயல்படுத்தப்படும். உதவி பார்வையர் கருவிப்பட்டையிலுள்ள பட்டியல் பெட்டியைப் பயன்படுத்தி தக்க செயலியைத் தேர்க.


Please support us!