அட்டவணை கட்டுப்பாடுகளுக்கான சிறப்பு துப்புகள்

நீங்கள் விரும்பியவாறு பதிவுகளைக் காட்சியளிக்க நீங்கள் ஓர் அட்டவணை கட்டுப்பாட்டை வரையறுக்கலாம். அதாவது, நீங்கள் தரவுத்தள படவங்களில் உள்ளதைப்போல தரவுகளை காட்சியளித்தல், தொகுத்தலுக்கான தரவுப் புலங்களை வரையறுக்க முடியும்.

பினவரும் புலங்கள் அட்டவணை கட்டுப்பாட்டில் சாத்தியமாகும்: உரை, தேதி, நேரம், நாணய புலம், எண்மிய புலம், பாங்கு புலம், சோதனை பெட்டி மற்றும் சேர்க்கை பெட்டி. ஒருங்கிணைந்த தேதி/நேர புலங்களுக்கு, இரு நிரல்கள் தானகவே உருவாக்கப்படுகின்றன.

தேர்ந்த வரிகளின் எண்ணிக்கை, ஏதேனும் தேர்வு செய்யப்பட்டால், பதிவுகள் மொத்த எண்ணிக்கைக்கு பிறகு அடைப்புக்குறிக்குள் இருக்கும்.

அட்டவணை கட்டுப்பாட்டுக்குள் நிரல்களை நுழைக்க, நிரல் தலைகளில் சொடுக்கி, சூழல் பட்டியைக் கொண்டுவரவும். பின்வரும் கட்டளைகள் கிடைக்கும்:

நிரலை நுழை

அட்டவணை கட்டுப்பாட்டில் ஒரு தரவுப் புலத்தை ஏற்றுக்கொள்ள அதனைத் தேர்வதற்கு ஒரு துணைப்பட்டியை அழைக்கவும்.

அட்டவணையை கட்டுப்பாட்டை இழுத்து போடுவதன் மூலம் கட்டமைக்கவும்: தரவு மூல உலாவியைத் திறந்து விரும்பிய புலங்களைத் தரவு மூல உலாவியிலிருந்து இழுத்து அட்டவணை கட்டுப்பாட்டின் நிரல் தலைகளில் விடவும். முன் - கட்டமைத்த நிரல் உருவாக்கப்படுகிறது.

உடன் மாற்றிவை

அட்டவணை கட்டுப்பாட்டில் தேர்ந்த தரவுப் புலத்தை மாற்றிவைக்க ஒரு தரவுப் புலத்தைத் தேர ஒரு துணைப்பட்டியைத் திறக்கிறது.

நிரலை அழி

நடப்பில் தேர்ந்த நிரலை அழிக்கிறது.

நிரல்

தேர்ந்த நிரலின் பண்புகள் உரையாடலைத் திறக்கிறது.

நிரல்களை மறை

தேர்ந்த நிரலை மறைக்கிறது. அதன் பண்புகள் மாறுவதில்லை.

நிரல்களைக் காட்டு

நிரல்களை மீண்டும் காட்டுவதற்காகத் தேர்வு செய்ய ஒரு துணைப்பட்டியை அழைக்கிறது. ஒரு நிரலை மட்டும் காட்டுவதற்கு, நிரலின் பெயரைச் சொடுக்கவும். நீங்கள் மறைந்துள்ள முதல் 16 நிரல்களை மட்டும் காண்பீர்கள். மறைந்துள்ள நிரல்கள் அதிகமாக இருப்பின், நிரல்களைக் காட்டு உரையாடலை அழைக்க நிறையகட்டளையைத் தேர்ந்தெடுக.

நிறைய

நிரல்களைக் காட்டு உரையாடலை அழைக்கிறது.

காட்டப்படவேண்டிய நிரல்களை நீங்கள்நிரல்களைக் காட்டு உரையாடலில் தேர்வு செய்யலாம். பல உள்ளீடுகளைத் தேர Shiftஅல்லது விசையை அழுத்தி வைத்திருக்கவும்.

அனைத்து

நீங்கள் அனைத்து நிரல்களையும் காட்ட வேண்டுமென்றால், அனைத்து ஐச் சொடுக்குக.

அட்டவணை கட்டுப்பாடுகள் இன் விசைப்பலகை - மட்டும் கட்டுப்பாடு

உங்கள் ஆவணத்தில் கட்டுப்பாடுகளுக்கிடையே பயணிக்க நீங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தினால், மற்ற வகை கட்டுப்பாடுகளோடு ஒரு வேறுபாட்டை நீங்கள் கண்டறிவீர்கள். கீற்று விசை அடுத்த கட்டுப்பாட்டுக்கு இடஞ்சுட்டியை நகர்த்தவில்லை. ஆனால், அட்டவணைக் கட்டுப்பாட்டிலுள்ள அடுத்த நிரலுக்கு நகர்த்துகிறது. அடுத்த கட்டுப்பாடிற்கு நகர்த்த +கீற்று ஐ அழுத்துக, அல்லது முந்தைய கட்டுப்பாட்டிற்கு நகர்த்த Shift++கீற்று ஐ அழுத்துக.

அட்டவணை கட்டுப்பாடுகளுக்கான சிறப்பு விசைப்பலகை - மட்டும் தொகு முறைக்கு நுழைய:

படிவ ஆவணம் கண்டிப்பாக வடிவமை முறை தான் இருக்கும்.

  1. ஆவணத்தைத் தேர +F6 ஐ அழுத்துக.

  2. முதல் கட்டுப்பாட்டைத் தேர Shift+F4 ஐ அழுத்தவும். அட்டவணை கட்டுப்பாடு முதல் கட்டுப்பாடாக இல்லையென்றால், அது தேர்ந்தெடுக்கப்படும் வரையில் கீற்றை அழுத்தவும்.

  3. தொகு முறையில் நுழைய உள்ளிடைஐ அழுத்தவும். கைப்பிடிகள் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து தொலைவில் காட்டப்படுகின்றன.

  4. தொகு முறையில், நீங்கள் தொகு முறை சூழல் பட்டியை Shift+F10 ஐ அழுத்துவதன் மூலம் திறக்க முடியும்.

  5. நீங்கள் நிரல்களைத் தொகுக்க வேண்டுமானால், நிரல் தொகு முறையில் நுழைய Shift+வெளி ஐ அழுத்துக.+அம்பு விசைகளைக் கொண்டு இப்போது நீங்கள் நிரல்களின் வரிசையை மீண்டும் அடுக்க முடியும். அழி விசை நடப்பு நிரலை அழிக்கிறது.

  6. தொகு முறையிலிருந்து வெளியேற Esc விசையை அழுத்தவும்.

Please support us!