கருவிப்பட்டைகள்

இப்பகுதி LibreOffice ரைட்டரில் உள்ள கருவிப்பட்டைகளின் ஒரு மேலோட்டத்தைத் தருகிறது. இந்த மேலோட்டம் LibreOffice க்கு ஆன முன்னிருப்புக் கருவிப்பட்டை வடிவாக்கத்தை விவரிக்கிறது.

செந்தரப் பட்டை

செந்தரப் பட்டை ஒவ்வொரு LibreOffice செயலிகளிலும் கிடைக்கிறது.

வடிவூட்டல் பட்டை

வடிவூட்டல் பட்டை பல உரை வடிவூட்டல் செயலாற்றிகளைக் கொண்டுள்ளது.

சித்திரப் பட்டை

வரைதல் பட்டை அடிக்கடி பயன்படுத்தப்படும் தொகுத்தல் கருவிப்பட்டைகளைக் கொண்டிருக்கிறது. கூடுதல் கட்டளைகளைக் கொண்டுள்ள படவுருவைக் கருவிப்பட்டையைத் திறக்க அடுத்துவுள்ள அம்பைச் சொடுக்குக.

பிம்பப் பட்டை

பிம்பப் பட்டை தேர்ந்த சில பிட்டுபட வரைவியல்களை வடிவூட்டும், நிலைப்படுத்தும் செயலாற்றிகளைக் கொண்டுள்ளது.

சட்டகப் பட்டை

ஒரு சட்டகம் தேரப்படும்போது, சட்டகப் பட்டை சட்டக வடிவூட்டலுக்கும் நிலைநிறுத்தலுக்குமான மிக முக்கிய செயலாற்றிகளை வழங்குகிறது.

OLE-பொருள் பட்டை

பொருள்கள் தேரப்பட்டதும் தென்படும் OLE-பொருள் பட்டை, பொருள்களின் வடிவூட்டலுக்கும் நிலைநிறுத்தலுக்குமான மிக முக்கிய செயலாற்றிகளைக் கொண்டிருக்கிறது.

அட்டவணை பட்டை

அட்டவணைகளைப் பயன்படுத்தும்போது உங்களுக்குத் தேவைப்படும் செயலாற்றிகளை அட்டவணை பட்டை கொண்டுள்ளது. நீங்கள் இடஞ்சுட்டியை ஒரு அட்டவணைக்குள் நகர்த்தினால் அது தென்படும்.

வரை பொருள் பண்புகள் பட்டை

நீங்கள் வரைபொருள் பண்புகள் பட்டையை ரைட்டரிலும் கல்கிலும் காணலாம். பட்டியில் பார்வை - கருவிப்பட்டைகள் - வரை பொருள் பண்புகள் ஐத் தேர்க. ஒரு வரைபொருள் தேர்வானதும் அதன் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பு ஆவணம் உரை ஆவணமா அல்லது விரிதாளா என்பதைப் பொருத்து வேறுபட்ட முன்னிருப்பு படவுருக்களை நீங்கள் காணலாம்.

பொட்டுகளும் எண்ணிடல் பட்டையும்

பொட்டுகளும் எண்ணிடலும் பட்டை எண்ணிட்ட பத்திகளின் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான செயலாற்றிகளைக் கொண்டுள்ளது; பத்திகளின் ஒழுங்கை மாற்றுவதும் வெவ்வேறு பத்திகளின் மட்டங்களை வரையறுப்பதும் இதில் சேர்த்தி.

உரை பொருள் பட்டை

வரை பொருள் கொண்டுள்ள உரைக்கான வடிவூட்டல் கட்டளைகளை கொண்டிருக்கிறது. உரைப் பொருள் பட்டையானது நீங்கள் வரை பொருளினுள் இருமுறை சொடுக்கும்போது தோன்றுகிறது.

நிலைப்பட்டை

நிலைப்பட்டை நடப்பு ஆவணம்பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளதோடு சிறப்பு செயலாற்றிகளைக் கொண்ட பல்வேறு பொத்தான்களையும் தருகிறது.

முன்னோட்டத்தை அச்சிடு

அச்சு முன்னோட்டப் பட்டை நீங்கள் நடப்பு ஆவணத்தை அச்சு முன்னோட்ட முறையில் பார்க்கும்போது தோன்றுகிறது.

அட்டவணை தரவுப்பட்டை

தரவுப் பார்வையை கட்டுப்படுத்த அட்டவணைத் தரவுப் பட்டையைப் பயன்படுத்துக.

அளவுகோல்கள்

அளவுகோல்கள் பக்கத்தின் பரிமாணங்கள், தத்தல்களின் இடம், உள்தள்கள், எல்லைகள், நிரல்கள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. நீங்கள் இவையனத்தையும் அளவுகோல்களில் சுட்டெலிகொண்டு மாற்றியமைக்கலாம்.

சூத்திரப்பட்டை

சூத்திரப் பட்டை கணக்கீட்டை உருவாக்கி ஒரு உரை ஆவணத்தினுள் நுழைக்க உங்களை அனுமதிக்கிறது.சூத்திரப் பட்டையைச் செயல்படுத்த, F2-ஐ அழுத்துக.

நுழை

சட்டகங்கள், வரைவியல்கள், அட்டவணைகள், மற்ற பொருள்கள் போன்றவற்றை நுழைப்பதற்கான பல செயாலாற்றிகளைக் கரிவிப்பட்டைகள் கொண்டுள்ளன.

பகுப்பாக்கப் பட்டை

பகுப்பாக்கப் பட்டையானது பாதுகாப்பாக ஆவணக் கையாளுதலுக்கு உதவும் கருவிகளைக் கொண்டிருக்கிறது.

The Classification toolbar contains listboxes to help in selecting the security of the document, according to the BAF category policy and BAILS levels. LibreOffice will add custom fields in the document properties (File - Properties, Custom Properties tab) to store the classification policy as document metadata.

Go to menu View - Toolbars and select Classification

Mail Merge Toolbar

The Mail Merge Toolbar contains commands for the final steps of the mail merge process.