தரவுத்தளம்

You can insert fields from any database, for example, address fields, into your document.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம் - கூடுதல் புலங்கள் - தரவுத்தளம் கீற்றைத் தேர்ந்தெடுக


வகை

கிடைக்கப்பெறும் புல வகைகளைப் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க, ஒரு புல வகையைச் சொடுக்கி, தேர் பட்டியலில் ஒரு புலத்தைச் சொடுக்குக, பிறகு நுழை ஐச் சொடுக்குக. பின்வரும் புலங்கள் கிடைக்கப்பெறுகின்றன:

புல வகை

அர்த்தம்

எந்தவொரு பதிவு

நீங்கள் உள்ளிட்ட நிபந்தனை பொருந்தினால், நீங்கள் பதிவெண் பெட்டி யில் அஞ்சல் ஒன்றாக்காக குறிப்பிட்ட தரவுத்தளப் புல உள்ளடக்கங்களை நுழைக்கிறது. தரவு மூல பார்வையில் பன்மடங்கு தெரிவுகளினால் தேர்ந்த பதிவுகள் மட்டுமே ஏற்கப்படுகின்றன.

பல பதிவுகளை உங்கள் ஆவணத்தில் நுழைக்க நீங்கள் இப்புலத்தைப் பயன்படுத்தலாம். சில பததிவுகளைப் பயன்படுத்தும் படிவ கடித புலங்களுக்கு முன் ஏதேனும் பதிவு புலத்தை நுழைக்கவும்.

தரவுத்தளப் பெயர்

தரவுத்தளத் தெரிவு பெட்டியில் தேர்ந்த தரவுத்தள அட்டவணையின் பெயரை நுழைக்கிறது. "தரவுத்தள பெயர்" புலமானது ஒரு உலக புலம், அதனால்தான் நீங்கள் வேறு தரவுத்தள பெயரை உங்கள் ஆவணத்தில் நுழைத்தால், முந்தையதாக நுழைக்கப்பட்ட " தரவுத்தள பெயர்" புலத்தின் அனைத்து உள்ளடக்கங்களும் புதுப்பிக்கப்படுகின்றன.

அஞ்சல் ஒன்றாக்குப் புலம்

தரவுத்தளப் புலத்தின் பெயரை இடம்பிடியாக நுழைக்கிறது, அதன் மூலம் நீங்கள் ஒரு அஞ்சல் ஒன்றாக்கு ஆவணத்தை உருவாக்க முடியும். நீங்கள் கடிதத்தை அச்சிடும்போது புல உள்ளடக்கங்கள் தானாகவே நுழைக்கப்படுகின்றன.

அடுத்த பதிவு

நீங்கள் வரையறுத்த நிபந்தனை பொருந்தினால் அடுத்த அஞ்சல் ஒன்றாக்குப் புலத்தின் உள்ளடக்கங்களை உங்கள் ஆவணத்தில் நுழைக்கிறது. நீங்கள் உள்ளடக்கவிரும்பும் பதிவுகள் தரவு மூலப் பார்வையில் கண்டிப்பாகத் தேரப்படவேண்டும்.

ஆவணத்தில் அஞ்சல் ஒன்றாக்குகளுக்கிடையேயுள்ள தொடர்ச்சியான பதிவுகளின் உள்ளடக்கங்களை நுழைக்க நீங்கள் "அடுத்த பதிவு" ஐப் பயன்படுத்தலாம்.

பதிவு எண்

தேர்ந்த தரவுத்தளப் பதிவின் எண்ணிக்கையை நுழைக்கிறது.


Note Icon

தொடர்புடைய புல வகைகளை வகை பட்டியலில் தேர்ந்தால் மட்டுமே பின்வரும் புலங்கள், நுழைக்கபட முடியும்.


தரவுத்தளத் தெரிவு

புலத்தில் நீங்கள் குறிப்பிடவிரும்பும் தரவுத்தளத்தள அட்டவணையையோ தரவுத்தள வினவலையோ தேர்க. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தரவுத்தளத்திலிருந்தோ வினவலிலிருந்தோ புலங்களை ஆவணத்தில் உள்ளடக்கலாம்.

நிபந்தனை

நிபந்தனை உடன் இணைக்கப்பட்ட புலங்களுக்கான, வரன்முறையை இங்கு உள்ளிடவும்.

உங்களுக்கு வேண்டுமானால், " எந்தவொரு பதிவு" ,"அடுத்த பதிவு" புலங்களின் உள்ள்டக்கங்கள் நுழைக்கப்படுவதற்கு முன்னரே பொருந்தும் நிபந்தனையை நீங்கள் ஒதுக்க வேண்டும். முன்னிருப்பு நிபந்தனை "உண்மை" ஆகும், அதனால்தான் நீங்கள் நிபந்தனை உரையை மாற்றவிடிலும் நிபந்தனையானது எப்போதுமே உண்மையாக இருக்கும்.

பதிவு எண்

நீங்கள் குறிப்பிட்ட அந்த நிபந்தனை இணங்கினால், நீங்கள் நுழைக்கவிருக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை உள்ளிடுக.பதிவு எண்ணிக்கை தரவு மூலப் பார்வையிலுள்ள ந்டப்புத் தெரிவுடன் ஒத்துப்போகிறது. எ.காட்டாக, நீங்கள் 10 பதிவுகளைக் கொண்டிருக்கும் தரவுத்தளத்திலுள்ள கடைசி 5 பதிவுகளைத் தேர்ந்தால், முதல் பதிவு 1 எண்ணாக அமையும், 6 ஆக அமையாது.

Note Icon

வெவ்வேறு தரவுத்தளத்திலுள்ள புலங்களை நீங்கள் பார்த்தால் (அல்லது வெவ்வேறு அட்டவணையில் அல்லது ஒரே தரவுத்தளங்களுக்கிடையில்), நடப்புத் தெரிவுக்குத் தொடர்புடைய பதிவு எண்ணைத் LibreOffice தீர்மானிக்கிறது.


வடிவூட்டு

Select the format of the field that you want to insert. This option is available for numerical, boolean, date and time fields.

தரவுதளத்திலிருந்து

தேர்ந்த தரவுத்தளத்தில் வரையறுத்த வடிவூட்டைப் பயன்படுத்துகிறது.

உலாவு

ஒரு தரவுத்தளக் கோப்பை (*.odb) நீங்கள் தேர்வுசெய்யக் கூடிய ஒரு கோப்பு திறப்பு உரையாடலைத் திறக்கும். தேர்ந்த கோப்பு, தரவுத்தளத் தெரிவுப் பட்டியலில் சேர்க்கப்படும்.

பயனர் வரையறுத்த

பயனர்-வரையறுத்த வடிவூட்டுகள் பட்டியல் இல் நீங்கள் தேர்ந்தெடுத்த வடிவூட்டைப் பயன்படுத்துகிறது.

பயனர் வரையறுத்த வடிவூட்டங்களின் பட்டியல்

Lists the available user-defined formats.

ஒரு படிவ கடிதத்தை அச்சிடுதல்

நீங்கள் தரவுத்தளப் புலன்ங்களைக் கொண்டிருக்கும் ஓர் ஆவணத்தை அச்சிடும்போது, நீங்கள் ஒரு படிவக் கடிதத்தை அச்சிடவிருக்கிறீர்களா என்பதனை ஒர் உரையாடல் கேட்கிறது. நீங்கள் ஆம் எனப் பதிலளித்தால், அஞ்சல் ஒன்றாக்கு உரையாடல் திறக்கிறது. இங்கு நீங்கள் அச்சிடுவதற்கான தரவுத்தளப் பதிவுகளைத் தேரலாம்.