உறை

உறைக்கான அனுப்பும் பெறும் முகவரிகளை உள்ளிடுக. நீங்கள் தரவுத்தளத்திலிருந்து கூட முகவரி புலங்களை நுழைக்கலாம், எ.கா முகவரிகள் தரவுத்தளத்திலிருந்து.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Envelope - Envelope tab


பெறுநர்

விநியோக முகவரியை உள்ளிடுக. நீங்கள் இந்தப் பெட்டியிலும் சொடுக்கி, ஒரு தரவுத்தளம், அட்டவணை, புலம் ஆகியவற்றைத் தேர்ந்து, பிறகு முகவரியில் புலத்தை நுழைக்க அம்பு பொத்தானைச் சொடுக்குக. நீங்கள் விருப்பப்பட்டால், தடிமனும் அடிக்கோடும் போன்ற வடிவூட்டல்களையும் முகவரி உரையில் செயல்படுத்தலாம்.

அனுப்புநர்

உறையில் திரும்பும் முகவரியை உள்ளடக்குகிறது. அனுப்புநர் தெரிவுப் பெட்டியைத் தேர்க, பிறகு திரும்பும் முகவரியை உள்ளிடுக.LibreOffice அனுப்புநர் பெட்டியிலுள்ள பயனர் தரவை தானாகவே நுழைக்கிறது, ஆனால் உன்ங்களுக்குத் தேவையான தரவையும் நீங்கள் நுழைக்கலாம்.

தரவுத்தளம்

நீங்கள் நுழைக்கவிருக்கும் முகவரித் தரவைக் கொண்டிருக்கும் தரவுத்தளத்தைத் தேர்க.

அட்டவணை

நீங்கள் நுழைக்கவிருக்கும் முகவரித் தரவைக் கொண்டிருக்கும் தரவுத்தள அட்டவணையைத் தேர்க.

தரவுத்தளப் புலம்

நீங்கள் நுழைக்கவிருக்கும் முகவரித் தரவைக் கொண்டிருக்கும் தரவுத் தளப் புலத்தைத் தேர்க, பிறகு இடது அம்பு பொத்தானைச் சொடுக்குக. இடஞ்சுட்டியைக் கொண்டிருக்கும் முகவரிப் பெட்டியில் தரவு சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னோட்டப் புலம்

நடப்புத் தெரிவின் ஒரு முன்னோட்டத்தைக் காட்டுகிறது.