படவிளக்கம்

தேர்ந்த பிம்பம், அட்டவணை, விளக்கப்படம், சட்டகம் அல்லது வடிவம் ஆகியவற்றிற்கான எண்ணிட்ட படவிளக்கத்தைச் சேர்க்கிறது படவிளக்கத்திற்கு நீங்கள் சேர்க்கவிருக்கும் உருப்படியை வலம் சொடுக்குவதிலும் இந்தக் கட்டளையை அணுகலாம்.

இக்கட்டளையை அணுக...

நுழை - படவிளக்கம் ஐத் தேர்

சூழல் பட்டியைத் திற - படவிளக்கம் ஐத் தேர்


பண்புகள்

நடப்புத் தெரிவுக்கான படவிளக்கத் தேர்வை அமை.

பகுப்பு

ஒரு புதுப் பகுப்பை உருவாக்க பகுப்பு படவிளக்கத்தைத் தேர்க அல்லது ஒரு பெயரைத் தட்டச்சிடுக. பகுப்பு உரையானது படவிளக்க எண்ன்னுக்கு முன் படவிளக்க விளக்கச்சீட்டில் தோன்றுகிறது. முன்வரையறுத்த படவிளக்க பகுப்பு ஒவ்வொன்றும் ஒரேபெயரிலான பத்திப் பாணியுடன் வடிவூட்டப்படுகிறது.எ.கா, "விளக்கம்" எனும் படவிளக்கப் பகுப்பு "விளக்கம்" எனும் பத்திப் பாணியுடன் வடிவூட்டப்படுகிறது.

எண்ணிடல்

படவிளக்கத்தில் நீங்கள் பயன்படுத்தவிருக்கும் எண்ணிடல் வகையைத் தேர்க.

படவிளக்கம்

படவிளக்க எண்ணைத் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பும் உரையைத் தட்டச்சிடுக.

பிரிப்பான்

எண்ணுக்கும் படவிளக்க உரைக்குமிடையே தோன்றுவதற்கான விருப்பத்திற்குரிய உரை வரியுருக்களை உள்ளிடுக.

நிலை

தேர்ந்த உருப்படியின் மேல் அல்லது கீழ் படவிளக்கத்தைச் சேர்க்கிறது. இந்தத் தேர்வானது சில பொருள்களிக்கு மட்டுமே கிடைக்கும்.

தேர்வுகள்

படவிளக்க விளக்கச்சீட்டுக்கு அத்தியாய எண்ணைச் சேர்க்கிறது. இந்த சிறப்பியல்பைப் பயன்படுத்த, நீங்கள் முதலில்திட்டவரை மட்டம் ஐ ஒரு பத்திப் பாணிக்கு அளிக்கவேண்டும், பிறகு உங்கள் ஆவணத்திலுள்ள அத்தியாய தலைப்புரைகளுக்குச் செயல்படுத்தவும்.

தானிபடவிளக்கம்

படவிளக்க உரையாடலைத் திறக்கிறது. இது, தேர்வுகள் உரையாடல் பெட்டியிலுள்ள LibreOffice ரைட்டர் - தானி படவிளக்கத்தினால் நீங்கள் பெற்ற உரையாடலைப் போல அதே தகவலைக் கொண்டிருக்கிறது.

பயன்படுத்தும் படவிளக்கங்கள்

படவிளக்கங்களுக்கு அத்தியாய எண்களைச் சேர்த்தல்