நூற்குறியை நுழை

இடஞ்சுட்டி இடத்தில் ஒரு நூற்குறியை நுழைக்கிறது. நீங்கள் பிறகு மாலுமியைப் பயன்படுத்தி குறித்த இடத்தில் பின்னர் விரைந்து குதிக்கலாம்.ஒரு HTML ஆவணத்தில், நீங்கள் ஒரு மீத்தொடுப்பிலிருந்து இன்னொன்றுக்குக் குதிப்பதற்காக நூற்குறிகள் நங்கூரங்களாக நிலைமாறுகின்றன.

இக்கட்டளையை அணுக...

நுழை - நூற்குறி ஐத் தேர்

நுழை கருவிப்பட்டையைத் திற, சொடுக்குக

படவுரு

நூற்குறி


குறிப்பிட்ட நூற்குறிக்குக் குதிக்க, மாலுமிஐயைத் திறப்பதற்கு F5 ஐ அழுத்துக, நூற்குறிஉள்ளீடுட்டுக்கு அடுத்துள்ள கூட்டல் குறியைச்(+) சொடுக்குவதோடு, பிறகு நூற்குறியை இருமுறை சொடுக்குக.

நூற்குறிகள்

நீங்கள் உருவாக்கவிருக்கும் நூற்குறியின் பெயரைத் தட்டச்சிடுக. தாழ்ந்த பட்டியலானது நடப்பு ஆவணத்திலுள்ள அனைத்து நூற்குறிகளையும் கொண்டுள்ளது. ஒரு நூற்குறியை அழிப்பதற்கு, பட்டியலில் அதனைத் தேர்ந்து, பிறகு அழி ஐச் சொடுக்குக.

நீங்கள் பின்வரும் வரியுருக்களை நூற்குறியின் பெயரில் பயன்படுத்தக்கூடாது: / \ @ : * ? " ; , . #

அழி

ஒரு நூற்குறியை அழிக்க, நூற்குறியை நுழைஉரையாடலிலிருந்து நூற்குறியைத் தேர்வதுடன் அழி பொத்தானைச் சொடுக்குக. உறுதிப்படுத்தல் உரையாடல் பின் வரா.