புலங்களைத் தொகு

ஒரு புலத்தின் பண்புகளைத் தொகுக்க முடிகின்ற ஒரு உரையாடலைத் திறக்கிறது. ஒரு புலத்தின் முன் சொடுக்குக, பிறகு இந்தக் கட்டளையைத் தேர்ந்தெடுக.உரையாடலில், முந்தைய மற்றும் அடுத்த புலத்திற்கு நகர நீற்கள் அம்பு பொத்தான்களைப் பயன்படுத்த முடியும்.

தொகுத்தலுக்காகப் புலத்தைத் திறக்க, உங்களின் ஆவணத்தில் நீங்கள் ஒரு புலத்தை இருமுறை சொடுக்கலாம்.

இக்கட்டளையை அணுக...

தொகு - புலங்கள்ஐத் தேர்ந்தெடு


Tip Icon

உங்கள் ஆவணத்திலுள்ள புலப் பெயர்கள், புல உள்ளடக்கங்களிடையேயுள்ள பார்வையை மாற்ற, பார்வை - புலப் பெயர்கள் ஐத் தேர்ந்தெடுக.


Note Icon

If you select a DDE link in your document, and then choose Edit - Fields, the Edit Links dialog opens.


Note Icon

"அனுப்புநர்" வகை புலத்தின் முன் நீங்கள் சொடுக்கினால், பிறகு தொகு- புலங்கள் ஐத் தேர்ந்தால், பயனர் தரவு உரையாடலைத் திறக்கிறது.


வகை

நீங்கள் தொகுக்குகின்ற புல வகையைப் பட்டியலிடுகிறது.

Note Icon

பின்வரும் உரையாடல் தனிமங்கள், தொடர்புடைய புல வகை தேர்ந்தெடுக்கப்படும்போதே தென்படும்.


தேர்

புல வகைத் தேர்வுகளைப் பட்டியலிடுகிறது, எ.கா, "நிலைத்த". நீங்கள் விரும்பினால், தேர்ந்த புல வகைக்கான மற்றொரு தேர்வைச் சொடுக்கலாம்.

வடிவூட்டு

புல உள்ளடக்கங்களுக்கான வடிவூட்டத்தைத் தேர்க. தேதி, நேரம், பயனர்-வரையறுத்த புலங்கள் ஆகியவற்றிற்கு, பட்டியலிலுள்ள "கூடுதல் வடிவூட்டங்களை" நீங்கள் சொடுக்கவ்வும் முடியும், பிறகு வேறொரு வடிவூட்டத்தைத் தேர்க.நீங்கள் தொகுக்கின்ற புல வகையைச் சார்ந்தே வடிவூட்டங்கள் கிடைக்கும்.

குறுங்கிடை

தேர்ந்த புல வகைக்கான குறுங்கிடையைக் காட்சியளிக்கிறது, எ.காட்டாக "அடுத்த பக்கம்", "பக்க எண்கள்" அல்லது "முந்தைய பக்கம்". காட்சியளியக்கப்பட்ட பக்க எண்ணுடன் சேர்க்கப்படும் ஒரு புதிய குறுங்கிடை மதிப்பை நீங்கள் உள்ளிடலாம்.

Warning Icon

நீங்கள் உண்மையான பக்க எண்ணையும் காட்சியளிக்கப்படாத எண்ணையும் மாற்ற விரும்பினால், குறுங்கிடை மதிப்பைப் பயன்படுத்தாதீர்கள். பக்க எண்களை மாற்றுவதற்கு, பக்க எண்கள் வழிகாட்டியை வாசிக்கவும்.


மட்டம்

வரையறுத்த மதிப்புகளையும் "அத்தியாயம்" புல வகைக்கான திட்டவரை மட்டங்களையும் மாற்றுக.

பெயர்

புல மாறியின் பெயரைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், ஒரு புதுப் பெயரை நீங்கள் உள்ளிட முடியும்.

மதிப்பு

புல மாறியின் நடப்பு மதிப்பைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், ஒரு புதுப் பெயரை நீங்கள் உள்ளிட முடியும்.

நிலைத்த உள்ளடக்கம்

புலத்தை நிலையான உள்ளடக்கமாக நுழைக்கிறது, அதாவது புலத்தைப் புதுப்பிக்க முடியாது.

நிபந்தனை

புலம் செயல்படுத்தப்படுத்தப்படுவதை அனுசரிக்கும் நிபந்தனையைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமெனில், ஒரு புதியநிபந்தனையை உள்ளிட முடியும்.

பிறகு, வேறு

புல நிபந்தனையை அடைகிறதா இல்லையா என்பதற்கேற்றவாறு காட்சியக்கப்படுகிற புல உள்ளடக்கங்களை மாற்றுக.

பெருமம்

பெருமத் தேர்வி ஐத் திறக்கிறது, ஆவணத்திலுள்ள தேர்ந்த புலத்தை நீங்கள் சொடுக்கும்பொழுது இயங்கக்கூடிய பெருமத்தை இங்கு நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். இந்தப் பொத்தான் "பெருமத்தைச் செயலாக்கு" எனும் செயலாற்றிப் புலத்திற்கு மட்டுமே கிடைக்கப்பெறும்.

மேற்கோள்

தேர்ந்த புலத்திற்கான மேற்கோள் உரையை நுழை அல்லது மாற்றியமை

பெரும பெயர்

தேர்ந்த புலத்திற்கு ஒப்படைத்த பெருமத்தின் பெயரைக் காட்சியளிக்கிறது.

இடம்பிடி

தேர்ந்த புலத்தின் இடம்பிடி உரையைக் காட்சியளிக்கிறது.

உரையை நுழை

நிபந்தனையுடன் இணைந்த உரையைக் காட்சியளிக்கிறது.

சூத்திரம்

சூத்திரப் புலத்தின் சூத்திரத்தைக் காட்சியளிக்கிறது.

தென்படாது

ஆவணத்திலுள்ள புல உள்ளடக்கங்களை நுழைக்கிறது.புலமானது ஒரு மெல்லிய சாம்பல் குறியாக ஆவணத்தினுள் நுழைக்கப்படுகிறது. இத்தேர்வு, "மாறியை அமை" மற்றும் "பயனர் புலம்" புல வகைக்கு மட்டுமே கிடைக்கப்பெறும்.

செயல்படுத்து

தெரிவு பட்டியலில் பயனர்-வரையறுத்த புலத்தைச் சேர்க்கிறது.

படவுரு

Apply

அழி

தெரிவுப் பட்டியலிலிருந்து பயனர்-வரையறுத்த புலத்தை அகற்றுகிறது.நீங்கள் நடப்பு ஆவணத்தில் பயன்படுத்தாத புலங்களை மட்டுமே அகற்ற முடியும். நடப்பு ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட புலத்தைப் பட்டியலிலிருந்து அகற்ற, முதலில் ஆவணத்திலுள்ள புலத்தின் அனைத்துச் சான்றுகளையும் அழித்து, பிறகு அவற்றைப் பட்டியலிலிருந்து அகற்றுக.

படவுரு

அழி

தரவுத்தளத் தெரிவு

இருந்து தேர்ந்த புலத்தில் நீங்கள் நீங்கள் நுழைக்கவிரும்பும் பதிவுற்ற தரவுத்தளத்தைத் தேர்க. தேர்ந்த புலம் குறிக்கின்ற அட்டவணை அல்லது வினவலையோ கூட நீங்கள் மாற்றலாம்.

பதிவு எண்

"ஏதாவது பதிவு" புல வகையைக் குறிப்பிடப்பட்ட நிபந்தனை சந்திக்கும்போது தரவுத்தளப் பதிவு எண்ணானது நுழைக்கப்படுகிறது எனக் காட்சியளிக்கிறது.

இடது அம்பு

ஆவணத்தில் ஒரே வகையான முந்தைய புலத்திற்குக் குதிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே வகையான புலத்தை ஆவணம் கொண்டிருந்தால் மட்டுமே இந்தப் பொத்தான் இயக்கத்தில் இருக்கும்.

படவுரு

முந்தைய புலம்

வலது அம்பு

ஆவணத்தில் ஒரே வகையான அடுத்த புலத்திற்குக் குதிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே வகையான புலத்தை ஆவணம் கொண்டிருந்தால் மட்டுமே இந்தப் பொத்தான் இயக்கத்தில் இருக்கும்.

படவுரு

அடுத்த புலம்

புலங்களைப் பற்றிய