மாலுமி

மாலுமி சாளரத்தை காட்டுகிறது அல்லது மறைக்கிறது, இங்கு நீங்கள் விரைந்து உங்கள் ஆவணத்தின் மற்ற பாகங்களுக்குக் குதிக்கலாம். மாலுமியானது பக்கப்பட்டையின் தளமாக கிடைக்கிறது. நடப்பு ஆவணத்திலிருந்தோ மற்ற திறந்த ஆவணங்களிலிருந்து தனிமங்களை நுழைப்பதற்கும் முதன்மை ஆவணங்களை ஒழுங்கமைப்பதற்கும் நீங்கள் மாலுமியைப் பயன்படுத்தலாம்.மாலுமியில் ஒரு உருப்படியைத் தொகுக்க, உருப்படியை வலம் சொடுக்குவதோடு, பிறகு சூழல்பட்டியிலிருந்து ஒரு கட்டளையைத் தேர்ந்தெடுக. நீங்கள் விரும்பினால், உங்கள் பணிமனையின் விளிம்பிலுள்ள மாலுமியை பொருத்தலாம்.

இக்கட்டளையை அணுக...

பார்வை - மாலுமி ஐத் தேர்க

செந்தரப் பட்டையில், சொடுக்குக

படவுரு

மாலுமி திற/அடை


மாலுமியைத் திறக்க, பார்வை - மாலுமி ஐத் தேர்ந்தெடுக. மாலுமியை நகர்த்த, அதன் தலைப்புப் பட்டையை இழுக்கவும். மாலுமியைப் பொருத்த, பணிமனை விளிம்பின் வலதுக்கோ இடதுக்கோ அதன் தலைப்புப் பட்டையை இழுக்கவும்.

பகுப்பிலுள்ள உருப்படிகளைப் பார்வையிட மாலுமியிலிருக்கும் பகுப்பின் அடுத்துள்ள (+) எனும் ஒப்பத்தைச் சொடுக்குக. பகுப்பிலுள்ள உருப்படிகளின் எண்ணிக்கையைப் பார்வையிட, உங்கள் சுட்டெலியின் சுட்டியை மாலுமியிலுள்ள பகுப்பின் மீது இளைப்பாற செய்க. ஆவணத்திலுள்ள ஒரு உருப்படியின் மீது குதிக்க, மாலுமியிலுள்ள உருப்படியை இருமுறை சொடுக்குக.

ஓர் ஆவணத்திலுள்ள முந்தைய அல்லது அடுத்த உருப்படிக்குக் குதிக்க, வலம்வரல் கருவிப்பட்டையைத் திறப்பதற்கான வலம்வரல் படவுருவைச் சொடுக்குக, பகுப்பிலுள்ள உருப்படியைச் சொடுக்குக, பிறகு மேல் அல்லது கீழ் அம்புகளைச் சொடுக்குக.

Note Icon

மறைந்துள்ள பிரிவானது, மாலுமியில் சாம்பல் நிறத்தில் தோன்றுவதோடு, அதன் மேல் நீங்கள் இடஞ்சுட்டியை வைத்திருக்கும்போது உரை "மறைந்துள்ளது" காட்சியளிக்கிறது. இதேபோலவே, ஆவணத்தில் பயன்படுத்தப்படாத பக்கப் பாணிகளின் தலைப்பகுதி, அடிப்பகுதி உள்ளடக்கங்கள், அட்டவணைகளில் மறைந்துள்ள உள்ளடக்கங்கள், உரைச் சட்டகங்கள், வரைவியல்கள், OLE பொருள்கள், அகவரிசைகள் ஆகியவற்றிற்கும் செயல்படுத்துகிறது.


முதன்மை பார்வையை நிலைமாற்றுக

முதன்மை பார்வைக்கும் இயல்பு பார்வைக்கும் இடையே வழிமாற்றுகிறது முதன்மை ஆவணம்திறக்கப்பட்டால்.

படவுரு

முதன்மை பார்வையை நிலைமாற்றுக

வலம்வரல்

வலம்வரல்கருவிப்பட்டையைத் திறக்கிறது, இங்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுப்பிலுள்ள அடுத்த அல்லது முந்தைய உருப்படிக்கு நீங்கள் விரைந்து குதிக்க முடியும். பகுப்பைத் தேர்க, பிறகு பிறகு "முந்தைய" மற்றும் "அடுத்த" அம்புகளைச் சொடுகுக.

தேடலைத் தொடர,திரும்பவும் தேடுஎனும் வலம்வரல் கருவிப்பட்டையிலுள்ள படவுருவைச் சொடுக்கவும்.

படவுரு

வலம்வரல்

முந்தைய

ஆவணத்திலுள்ள முந்தைய உருப்படிக்குக் குதிக்கிறது. குதிக்கவேண்டிய உருப்படியின் வகையை குறிப்பிட, வலம்வரல் படவுருவைச் சொடுக்குவதோடு, பிறகு உருப்படி பகுப்பைச் சொடுக்குக - எ.கா, "பிம்பங்கள்".

படவுரு

முந்தைய பொருள்

அடுத்து

ஆவணத்திலுள்ள முந்தைய உருப்படிக்குக் குதிக்கிறது. குதிக்கவேண்டிய உருப்படியின் வகையைக் குறிப்பிட, வலம்வரல் படவுருவைச் சொடுக்குவதோடு, பிறகு உருப்படி பகுப்பைச் சொடுக்குக - எ.கா, "பிம்பங்கள்".

படவுரு

அடுத்த பொருள்

பக்க எண்

நீங்கள் குதிக்கவிருக்கும் பக்க எண்ணின் எண்ணிகையை தட்டச்சிடுக, பிறகு உள்ளிடையை அழுத்துக.

Tip Icon

To quickly move the cursor to another page while you are in a document, press Shift++F5, type the number of the page that you want to jump to, and then wait a few moments.


பட்டியல் பெட்டி

மாலுமி பட்டியலை காட்டுகிறது அல்லது மறைக்கிறது.

படவுரு

பட்டியல் பெட்டி திற/அடை

உள்ளடக்கப் பார்வை

மாலுமியிலுள்ள அனைத்துப் பகுப்புகளின் காட்சியையும் தேர்ந்த பகுப்பையும் வழிமாற்றுகிறது.

படவுரு

உள்ளடக்கப் பார்வையை வழிமாற்று

Tip Icon

உங்கள் ஆவணத்திலுள்ள தலைப்புரைகளையும் அதன் தொடர்புடைய உரையையும் விரைந்து மறுஒழுங்கமைப்பதற்கு, பட்டியலிலுள்ள "தலைப்புரை" பகுப்பைத் தேர்க, பிறகு உள்ளடக்கப் பார்வைபடவுருவைச் சொடுக்குக. இப்போது, உள்ளடக்கங்களை மறுஒழுங்கமைக்க இழுத்துப் போடுதலைப் பயன்படுத்த முடியும்.


நினைவூட்டியை அமை

Click here to set a reminder at the current cursor position. You can define up to five reminders. To jump to a reminder, click the Navigation icon, in the Navigation window click the Reminder icon, and then click the Previous or Next button.

படவுரு

நினைவூட்டியை அமை

தலைப்புரை

தலைப்பகுதிக்கோ, தலைப்பகுதியிலிருந்து ஆவண உரை பரப்பிற்கோ இடஞ்சுட்டியை நகர்த்துகிறது.

படவுரு

தலைப்பகுதி

அடிப்பகுதி

அடிப்பகுதிக்கோ, அடிப்பகுதியிலிருந்து ஆவண உரை பரப்பிற்கோ இடஞ்சுட்டியை நகர்த்துகிறது.

படவுரு

அடிப்பகுதி

நங்கூரம் <-> உரை

அடிக்குறிப்பு உரைக்கும் அடிக்குறிப்பு நங்கூரத்திற்குமிடையே குதிக்கிறது.

படவுரு

நங்கூரம் <-> உரை

இழு முறை

மாலுமியிலிருந்து உருப்படிகளை ஓர் ஆவணத்தினுள் நுழைத்தலிக்கான இழுத்துப்போடு தேர்வுகளை அமைக்கிறது, எ.கா, ஒரு மீத்தொடுப்பாக. இப்படவுருவைச் சொடுக்குவதோடு, பிறகு நீங்கள் பயன்படுத்தவிருக்கும் தேர்வைத்ததேர்ந்தெடுக.

படவுரு

இழு முறை

மீத்தொடுப்பாக நுழை

நடப்பு ஆவணத்தினுள் ஒரு உருப்படியை நீங்கள் இழுத்துப் போடும்பொழுது ஒரு மீத்தொடுப்பை உருவாக்குகிறது. மீத்தொடுப்பு சுட்டும் உருப்படிக்குக் குதிப்பதற்கு, ஆவணத்திலிருக்கும் மீத்தொடுப்பைச் சொடுக்குக.

தொடுப்பாக நுழை

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுத்துப் போடும் இடத்தில் தேர்ந்தஉருப்படியைத் ஒரு தொடுப்பாக நுழைக்கிறது. காக்கப்பட்ட பிரிவுகளாக உரை நுழைக்கப்படுகிறது. மூலம் மாற்றப்படும்பொழுது தொடுப்பின் உள்ளடக்கங்கள் தானாகப் புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு ஆவணத்திலுள்ள தொடுப்புகளைக் கைமுறையாகப் புதுப்பிக்க கருவிகள்- புதுப்பி- தொடுப்புகள் ஐத் தேர்க. நீங்கள் வரைவியல், OLE பொருட்கள், மேற்கோள்கள், அகவரிசைகள் ஆகியவற்றிற்கான தொடுப்புகளை உருவாக்க முடியாது.

நகலாக நுழை

நடப்பு ஆவணத்தில் இழுத்துப் போடும் இடத்தில் தேர்ந்த உருப்படியின் ஒரு நகலை நுழைக்கிறது. நீங்கள் வரைவியல்கள், OLE பொருட்கள், மேற்கோள்கள், அகவரிசைகள் ஆகியவற்றின் நகல்களை இழுத்துப் போட முடியாது.

திட்டவரை மட்டம்

இப்படவுருவைச் சொடுக்குவதோடு, பிறகு நீங்கள் மாலுமி சாரளத்தில் பார்வையிடவிருக்கும் தலைப்புரை திட்டவரை மட்டங்களின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக. மாலுமி சாளரத்திலுள்ள தலைப்புரையை வலச் சொடுக்குவதினாலும் நீங்கள் இந்தக் கட்டளையை அணுகலாம்.

1-10

சாளரம் வலம்வரலிலுள்ள மேல் மட்டம் தலைப்புரைகளை (அத்தியாயத் தலைப்புரை) மட்டும் பார்வையிட 1 ஐயும் அனைத்துத் தலைப்புரைகளையும் பார்வையிட 10 ஐயும் சொடுக்குக.

படவுரு

திட்டவரை மட்டம்

அத்தியாயம் மேல்

தேர்ந்த தலைப்புரைகள், தலைப்புரைக்கு கீழுள்ள உரை, மற்றும் மாலுமியிலும் ஆவணத்திலும் உள்ள தலைப்புரையின் இடத்தை ஒரு மட்டம் மேலாக நகர்த்துகிறது. தலைப்புரையிடோடு தொடர்புடைய உரை இன்றி, தேர்ந்த தலைப்புரையை மட்டும் நகர்த்த Ctrl அழுத்தியிருந்து, பிறகு இந்தப் படவுருவைச் சொடுக்குக.

படவுரு

அத்தியாயம் மேல்

அத்தியாயம் கீழ்

தேர்ந்த தலைப்புரை, தலைப்புரைக்குக் கீழுள்ள உரை, மாலுமி மற்றும் ஆவணத்திலுள்ள தலைப்புரை நிலையை கீழேயும் நகர்த்துகிறது. தலைப்புரையுடனான உரையின்றி தேர்ந்த தலைப்புரையை மட்டும் நகர்த்த, ctrl ஐக் கீழ் அழுத்தி, இப்படவுருவைச் சொடுக்கவும்.

படவுரு

அத்தியாயம் கீழ்

மட்டத்தை உயர்த்து

தேர்ந்த தலைப்புரை, தலைப்புரைக்குக் கீழ் வரும் தலைப்புரைகள் ஆகியவற்றின் திட்டவரை மட்டத்தை ஒரு மட்டமாக அதிகரிக்கிறது. தேர்ந்த தலைப்புரைகளின் திட்டவரை மட்டத்தை மட்டும் அதிகரிக்க, ctrl ஐக் கீழ் அழுத்திருந்து, இப்படவுருவைச் சொடுக்கவும்.

படவுரு

மட்டத்தை உயர்த்து

மட்டத்தைத் தாழ்த்து

தேர்ந்த தலைப்புரை, தலைப்புரையின் கீழ் வரும் தலைப்புரையின் திட்டவரை மட்டத்தை ஒரு மட்டம் குறைக்கிறது. தேர்ந்த தலைப்புரையின் திட்டவரை மட்டத்தை மட்டும் குறைக்க, ctrl ஐக் கீழ் அழுத்திருந்து, இப்படவுருவைச் சொடுக்கவும்.

படவுரு

மட்டத்தைத் தாழ்த்து

ஆவணங்களைத் திற

அனைத்துத் திறந்த உரை ஆவணங்களின் பெயர்களையும் பட்டியலிடுகிறது. வலம்வரல் சாளரத்திலுள்ள ஓர் ஆவணத்தின் உள்ளடக்கங்களைப் பார்க்க, ஆவணத்தின் பெயரைப் பட்டியலில் தேர்க. வலம்வரலில் காட்சியளிக்கப்படும் நடப்பு ஆவணமானது பட்டியலில் அதன் பெயருக்குப் பிறகு "இயக்கத்தில்" எனும் சொல்லால் சுட்டப்படுகிறது.

நீங்கள் மாலுமியிலுள்ள ஓர் உருப்படியை வலச் சொடுக்கி, காட்சி ஐத் தேர்ந்து, பிறகு பார்வையிடவிருக்கும் ஆவணத்தைத் தேர்க.