புள்ளிகள் பட்டையைத் தொகு

நீங்கள் ஒரு பலகோணத்தைத் தேர்ந்துபுள்ளிகளைத் தொகு ஐச் சொடுக்கும்போது புள்ளியைத் தொகு பட்டை தோன்றுகிறது

வழங்கப்பட்ட செயலாற்றிகள் உங்களை ஒரு வளைவின் புள்ளிகளையோ வளைவாக மாற்றப்பட்ட ஒரு பொருளையோ தொகுக்க அனுமதிக்கிறது. பின்வரும் படவுருக்கள் கிடைக்கப்பெறுகின்றன:

புள்ளிகளைத் தொகு

தொகுப் புள்ளிகள்படவுருக்கள் உங்களைப் பெஸியர் பொருள்களுக்கான தொகு முறையைச் செயல்படுத்த அல்லது செயல் நீக்குவதற்கு அனுமதிக்கிறது. வரைபடத்தின் தொகு முறையில், தனிப்பட்ட புள்ளிகள் தேரப்பட முடியும்.

படவுரு

புள்ளிகளைத் தொகு

புள்ளிகளை நகர்த்து

நீங்கள் புள்ளிகளை நகர்த்த முடிகின்ற முறைதைச் செயல்படுத்துகிறது. ஒரு புள்ளியில் இருக்கும்போது சுட்டெலி சுட்டியானது ஒரு சிறிய காலி சதுரத்தைக் காட்சியளிக்கிறது. புள்ளியை ம்மற்றொரு இடத்திற்கு இழுக்கவும்.புள்ளியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள வளைவு நகர்வைத் தொடர்கிறது. அடுத்த புள்ளிகளிடையேயுள்ள வளைவின் பிரிவு வடிவத்தை மாற்றுகிறது.

வளைவின் இரு புள்ளிகளுக்கிடையேயுள்ள அல்லது மூடப்பட்ட வளைவின் இடையே சுட்டுவதோடு அதன் உருக்குலைக்காமல் வளைவு முழுதையும் மாற்ற சுட்டெலியை இழுக்கவும்.

படவுரு

புள்ளிகளை நகர்த்து

புள்ளிகளை நுழை

நுழை முறையை செயல்படுத்துகிறது. இந்த முறையானது நீங்கள் புள்ளிகளை நுழைப்பதற்கு அனுமதிக்கிறது. நீங்கள் புள்ளிகளை நகர்த்தவும் முடியும், நகர்வு முறையிலுள்ளதைப் போல. எனினும், நீங்கள் இரு புள்ளிகளுக்கிடையேயுள்ள வளைவில் சொடுக்குவதோடு சுட்டெலி பொத்தானை அழுத்தியவாறே நகர்த்தும்போது நீங்கள் ஒரு புதுப் புள்ளியை நுழைப்பீர்கள்.இப்புள்ளி மென்மையானதாகும், கட்டுப்பாட்டுப் புள்ளிகளுக்கான வரிகள் இணையானவை. அவை நகர்த்தப்படும்போது அப்படியே இருக்கும்.

நீங்கள் ஒரு மூலைப் புள்ளியை உருவாக்கவிரும்பினால், மூலைப் புள்ளி ஐப் பயன்படுத்தி ஒரு மூலைப் புள்ளிக்கு நிலைமாறும் மென்மையான அல்லது சமச்சீரான புள்ளியில் எதாவதை முதலில் நுழைக்க வேண்டும்.

படவுரு

புள்ளிகளை நுழை

புள்ளிகளை அழி

ஒன்று அல்லது பல தேர்ந்த புள்ளிகளை அழிக்க புள்ளிகளை அழி படவுருவைப் பயன்படுத்துக. நீங்கள் பல புள்ளிகளைத் தேர விரும்பினால், சிப்டைக் கீழ் வைத்திருக்கும்போது தகுந்த புள்ளிகளைச் சொடுக்குக.

அழிக்கப்படவிருக்கும் புள்ளிகளை முதலில் தேர்க, பிறகு இந்தப் படவுருவைச் சொடுக்குக அல்லது Del ஐ அழுத்துக.

படவுரு

புள்ளிகளை அழி

வளைவைப் பிரி

வளைவைப் பிரி படவுருக்களை வளைவைப் பிரிக்கின்றன. வளைவைப் பிரிக்கவேண்டிய இடத்தில் புள்ளி அல்லது புள்ளிகளைத் தேர்க, பிறகு படவுருவைச் சொடுக்குக.

படவுரு

வளைவைப் பிரி

வளைவுக்கு நிலைமாற்று

வளைவை நேர் வரிக்கோ அல்ல்து நேர் வரியை வளைவுக்கோ நிலைமாற்றுகிறது. நீங்கள் ஒரு ஒற்றைப் புள்ளியைத் தேர்ந்தால், புள்ளிக்கு முன்னரான வளைவு நிலைமாற்றப்படும். இரண்டு புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படால், இரு புள்ளிகளுக்கிடையிலான வளைவு நிலைமாற்றப்படும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளைத் தேர்வு செய்தால், நீங்கள் ஒவ்வொரு முறை இப்படவுருவைச் சொடுக்கும்போதும், வளைவின் வேறுபட்ட பகுதியானது நிலைமாற்றப்படுகிறது. தேவைப்பட்டால், வட்டப் புள்ளிகள் மூலைப் புள்ளிகளாகவும் மூலைப் புள்ளிகள் வட்டப் புள்ளிகளாகவும் நிலைமாற்றப்படும்.

ஒரு வேளை, வளைவிம் சில பிரிவுகள் நேராக இருந்தால், வரியின் நிறைவுப்புள்ளிகள் ஒவ்வொன்றும் அதிகபட்ச ஒரு கட்டுப்பாட்டுப் புள்ளியைக் கொண்டிருக்கும். மீண்டும் நேர் வரியானது வளைவுக்கு நிலைமாற்றப்பட்டால் மட்டுமே தவிர்த்து, அவை வட்டப் புள்ளிகளுக்கு மாற்றியமைக்கப்பட முடியாதவை.

படவுரு

வளைவுக்கு நிலைமாற்று

மூலைப்புள்ளி

தேர்ந்த புள்ளியையோ புள்ளிகளையோ மூலைப் புள்ளிகளுக்கு நிலைமாற்றுகிறது. மூலைப்புள்ளகள் இரண்டு அசையக்கூடிய கட்டுப்பாட்டுப் புள்ளிகளைக் கொண்டுள்ளது, அவை ஒருவருக்கொருவர் சுயாதீனமானவை. ஆகையால், வளைந்த வரியானது மூலையில் புள்ளியின் மூலம் நேராக செல்வதில்லை, ஆனால் ஒரு மூலையை உருவாக்குகிறது.

படவுரு

மூலைப்புள்ளி

மிருதுவான மாறுநிலை

ஒரு மூலைப்புள்ளியையோ சமச்சீரான புள்ளியையோ ஒரு மென்மையான புள்ளிக்கு நிலைமாற்றுகிறது. மூலைப் புள்ளியின் இரு கட்டுப்பாட்டுப் புள்ளிகளும் இணையாகச் சீரமைக்கப்படுவதோடு, அவை ஒரே நேரத்தில் மட்டுமே நகர்த்தப்பட முடியும். கட்டுப்பாட்டுப் புள்ளிகள் நீளத்தில் வேறுபடலாம், அவை உங்களை வளைமையின் பாகத்தை மாறுபடுத்தவும் அனுமதிக்கிறது.

படவுரு

மிருதுவான மாற்றம்

சமச்சீரான மாறுநிலை

இந்தப் படவுரு ஒரு மூலைப்புள்ளியையோ மிருதுவான புள்ளியையோ சமச்சீரான புள்ளிக்கு நிலைமாற்றுகின்றன. மூலைப் புள்ளியின் இரண்டு கட்டுப்பாட்டுப் புள்ளிகளும் இணையாகச் சீரமைக்கப்படுகிறது, இரண்டும் ஒரே நீளமுடையவை. அவை ஒரே நேரத்தில் மட்டுமே நகர்த்த முடிவதோடு வளைவின் பாகையானது இரு திசைகளிலும் ஒரே மாதிரி இருக்கின்றன.

படவுரு

சமச்சீரான மாறுநிலை

பெசியரை மூடு

ஒரு வரியையோ ஒரு வளைவையோ மூடுகிறது.வரியானது கடைசி புள்ளியையும் முதல் புள்ளியையும் இணைப்பதன் மூலம் மூடப்படுகிறது, ஒரு விரிவான சதுரத்தால் சுட்டிக்காட்டப்படுகிறது.

படவுரு

பெசியரை மூடு

புள்ளிகளை நீக்கு

Marks the current point or the selected points for deletion. This happens in the event that the point is located on a straight line. If you convert a curve or a polygon with the Convert to Curve icon into a straight line or you change a curve with the mouse so that a point lies on the straight line, it is removed. The angle from which the point reduction is to take place

படவுரு

புள்ளிகளை நீக்குக