விளக்கப்பட அச்சுகளைத் தொகுத்தல்

நீங்கள் நுழைத்த விளக்கப்படத்தின் அச்சுகளைத் தொகுக்க:

  1. விளக்கப்படத்தில் இருமுறை சொடுக்கவும்.

    விளக்கப்படத்தைச் சுற்றி ஒரு சாம்பல் எல்லை தோன்றுகிறது. இப்போது பட்டிப்பட்டையானது விளக்கப்படத்திலுள்ள பொருள்களைத் தொகுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

  2. வடிவூட்டு - அச்சு ஐத் தேர்ந்தெடுக, பிறகு நீங்கள் தொகுக்க விரும்பும் அச்சு அல்லது அச்சுகளைத் தேர்க. ஓர் உரையாடல் தோன்றுகிறது.

  3. கிடைக்கும் பிரிவுகளைத் தேர்வதோடு தேவைப்படும் மாற்றங்களைச் செய்க (எ.கா அச்சின் ஒப்பளவை நீங்கள் மாற்ற விரும்பினால், ஒப்பளவு கீற்றைத் தேர்க).

  4. சரி ஐச் சொடுக்குக. உங்கள் ஆவணத்தில், விளக்கப்பட தொகுத்தல் முறையிலிருந்து வெளியேற விளக்கப்படத்தில் வெளியில் சொடுக்குக.