ActiveX Control to Display Documents in Internet Explorer

சாளரங்களில் மட்டுமே, மைக்ரோசாப்ட் இணைய ஆய்வுலாவர் சாளரத்திலுள்ள ஏதேனும் LibreOffice ஆவணங்களை நீங்கள் பார்வையிட முடியும். LibreOffice அமைப்பு நிரலுள்ள ActiveX கட்டுப்பாட்டை நிறுவுக.

ActiveX கட்டுப்பாட்டை நிறுவல்

  1. LibreOffice ஐயையும் விரைவுத் தொடக்கியையும் மூடு

  2. சாளரப் பணிப்பட்டையிலுள்ள தொடக்குப் பொத்தானைச் சொடுக்குக.கட்டுப்பாட்டகம் ஐத் தேர்தெடுக.

  3. கட்டுப்பாட்கத்தில், நிரலிகளை சேர் அல்லது அகற்று ஐச் சொகடுக்குக.

  4. பட்டியலில், LibreOffice ஐச் சொடுக்குக, பிறகு மாற்று ஐச் சொடுக்குக.

  5. நிறுவல் வழிகாட்டியில், மாற்றியமை ஐத் தேர்க.

  6. விருப்பத்திற்குரிய பாகங்களைத் திறப்பதுடன் ActiveX கட்டுப்பாட்டு உள்ளீட்டைக் கண்டுபிடிக. படவுருவின் துணைப் பட்டியைத் திறப்பதுடன் சிறப்பியல்பை நிறுவ தேர்க.

  7. அடுத்து மற்றும் நிறுவு ஐச் சொடுக்குக.

LibreOffice ஆவணங்களைப் பார்வையிடுதல்

  1. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில், LibreOffice ரைட்டருக்கு இணைக்கும் தொடுப்பைக் கொண்டிருக்கும் வலைப் பக்கத்தை உலாவுக, எ.கா.

  2. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சாளரத்திலுள்ள ஆவணத்தைப் பார்வையிட தொடுப்பைச் சொடுக்குக.

    உங்கள் வன்தட்டில் கோப்பச் சேமிக்க நீங்கள் இன்னும் தொடுப்பை வலம் சொடுக்கலாம்.

LibreOffice ஆவணங்களைத் தொகுத்தல்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரிலுள்ள LibreOffice ஆவணமானது ஒரு வாசிக்கமட்டும் கருவிப்பட்டைப் படவுருகக்ளைக் காட்டுகிறது.

  1. ஆவணத்தின் நகலை புது LibreOffice சாளரத்தில் திறக்க ஆவணக் கருவிப்பட்டையிலுள்ள கோப்பைத் தொகுபடவுருவைச் சொடுக்குக.

  2. ஆவணத்தின் நகலைத் தொகு.