வினவல்கள்

ஒரு "வினவல்" என்பது ஒரு அட்டவணையின் சிறப்புப் பார்வையாகும். ஒரு வினவல் தெரிவு செய்த பதிவுகளையும் அல்லது தெரிவு செய்த புலங்களுக்குள்ளான பதிவுகளையும் காட்சியளிக்கும்; அது அப்பதிவுகளை வரிசைபடுத்தவும் செய்கிறது. ஓர் வினவலை ஒர் அட்டவணைக்கும் பல்வேறு அட்டவணைகளுக்கும் செயல்படுத்தலாம், அவை பொதுவான தரவுப் புலங்களால் இணக்கப்பட்டிருந்தால்.

இக்கட்டளையை அணுக...

In a database file window, click the Queries icon


சில நிபந்தனைகளின் அடிப்படையில் தரவு அட்டவணைகளிலிருந்து பதிவுகளைக் கண்டுபிடிக்க வினவல்களைப் பயன்படுத்துக. அனைத்து வினவல்களும் வினவல்கள் உள்ளீடுகளின் கீழ்ப் பட்டியலிடப்பட்டுள்ள தரவுத்தளத்திற்காக உருவாக்கப்பட்டன. இந்த உள்ளீடு தரவுத்தள வினவல்களைக் கொண்டிருப்பதால், இது "வினவல் கொள்கலன்" எனவும் அழைக்கப்படுகிறது.

அச்சுக்கான வினவல்கள்

ஒரு கேள்வியையோ அட்டவணையையோ அச்சிட:

  1. உரை ஆவணத்தைத் திறக்கவும் ( அல்லது நீங்கள் இந்த வகை ஆவணத்தின் குறிப்பிட்ட அச்சிடுதலின் செயலாற்றிகளை விரும்பினால் விரிதாள் ஆவணத்தைத் திறக்கவும்)

  2. தரவுத்தளக் கோப்பைத் திறப்பதோடு, நீங்கள் ஒரு அட்டவணையை அச்சிட வேண்டுமென்றால் அட்டவணையின் படவுருவைச் சொடுக்குக, அல்லது நீங்கள் ஒரு வினவலை அச்சிடவேண்டுமென்றால், வினவலின் படவுருவைச் சொடுக்குக.

  3. அட்டவணை அல்லது வினவலின் பெயரைத் திறந்த உரை ஆவணத்திற்கோ விரிதாளுக்கோ இழுக்கவும். தரவுத்தள நிரல்களை நுழை எனும் உரையாடல் திறக்கிறது.

  4. எந்தப் நிரல்கள் = தரவுப் புலங்களை நீங்கள் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். நீங்கள் தானிவடிவூட்டம் பொத்தானைச் சொடுக்குவதோடு தொடர்புடைய வடிவூட்டல் வகையையும் தேரலாம். உரையாடலை மூடவும்.

    வினவலோ அட்டவணையோ உங்களின் ஆவணத்தில் நுழைக்கப்படும்.

  5. கோப்பு - அச்சிடு ஐத் தேர்வுசெய்வதன் மூலம் ஆவணத்தை அச்சிடுக.

Tip Icon

You can also open the data source view (Ctrl+Shift+F4), select the entire database table in the data source view (click on the top left corner of the table), and then drag the selection to a text document or spreadsheet.


தரவை வரிசைப்படுத்துதலும் வடிப்பித்தலும்

உங்களை வினவல் அட்டவணையிலுள்ள தரவை வரிசைபடுத்தவும் வடிப்பிக்கவும் அனுமதிக்கிறது.

வினவல் வடிவமைப்பு

நீங்கள் வினவல் வடிவமைப்பு ஐக் கொண்டு, வினவலை உருவாக்க, தொகுக்க அல்லது பார்வையிடலாம்.

வினவல் வடிவமைப்புப் பட்டை

SQL வினவலை உருவாக்கும்பொழுதோ தொகுக்கும்பொழுதோ, தரவுக் காட்சியைக் கட்டுப்படுத்த வினவல் வடிவமைப்பு பட்டையிலுள்ள படவுருக்களைப் பயன்படுத்துக.

சில அட்டவணைகளின் மூலம் வினவல்

ஒன்றோடொன்று பொருத்தமான தரவுப் புலங்களினால் இணைக்கப்பட்டிருந்தால் வினவலின் முடிவானது சில அட்டவணைகளின் தரவைக் கொண்டிருக்கலாம்.

வினவலின் வரன்முறையை இயற்றுதல்.

ஒரு வினவலுக்கான வடிப்பியின் நிபந்தனைகளை இயற்ற எந்தச் செய்கருவிகளையும் கட்டளைகளையும் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் கண்டறியலாம்.

செயல்பாடுகளைச் செயலாக்குதல்

நீங்கள் அட்டவணையின் தரவைக்கொண்டு கணக்கீடுகளைச் செய்யமுடிவதோடு அதன் முடிவுகளை வினவலின் முடிவாகச் சேமிக்கலாம்.