தொலைநகலி வழிகாட்டி

தொலைநகலிக்கான வழிகாட்டியைத் திறக்கிறது. தொலைநகலி ஆவணங்களுக்காக ஆவண வார்ப்புருக்களை உருவாக்க வழிகாட்டி உங்களுக்கு உதவ முடியும். பிறகு நீங்கள் தொலைநகலி ஆவணங்களை இயக்கி மென்பொருள் கிடைக்கப்பெற்றால் அச்சுப்பொறியில் அல்லது தொலைநகலி இயந்திரத்தில் அச்சிட முடியும்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - வழிகாட்டிகள் - தொலைநகலிஐத் தேர்க


தொலைநகலி ஆவணங்களுக்கான வார்ப்புருவுடன் LibreOffice வருகிறது, அதனை உங்களின் சுய தேவைகளுக்கு ஏற்றவாறு வழிகாட்டியுடன் மாற்றியமைக்க முடியும். வழிகாட்டி ஆவண வார்ப்புரு உருவாக்குவதில் உங்களைப் படிப்படியாக இட்டுச் செல்கிறது, அதோடு பல தளக்கோலத்தையும் வடிவமைப்பு தேர்வுகளையும் வழங்குகிறது. ஆவண முன்னோட்டமானது முடிக்கப்பட்ட தொலைநகலியின் தோற்றம் குறித்து உங்களுக்கு மனப்பதிவைத் தருகிறது.

உரையாடல்களுக்கிடையே உங்களின் உள்ளீடுகளையும் தேர்வுகளையும் எந்நேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்க முடியும். நீங்கள் ஒரு பக்கத்தையோ அனைத்து வழிகாட்டிப் பகங்களையோ கூட தவிர்க்க முடியும், அதாவது நடப்பு (அல்லது முன்னிருப்பு) அமைவுகள் செயலில் தொடர்ந்திருக்கும் நிலையில்.

தொலைநகலி வழிகாட்டி- பக்கம் வடிவமைப்பு

உங்களின் தொலைநகலி ஆவணத்தின் பாணியை வரையறுக்கிறது

தொலைநகலி - உள்ளடக்கவேண்டிய உருப்படிகள்

அச்சிடப்பட வேண்டிய தொலைநகலி தனிமங்களைக் குறிப்பிடுகிறது.

தொலைநகலி வழிகாட்டி - அனுப்புநரும் பெறுநரும்

தொலைநகலிக்கான பெறுநர் அனுப்புநர் ஆகியோரின் தகவலைக் குறிப்பிடுகிறது.

தொலைநகலி வழிகாட்டி - அடிப்பகுதி

அடிப்பகுதி தரவைக் குறிப்பிடுகிறது.

தொலைநகலி வழிகாட்டி - பெயரும் இடமும்

வார்ப்புருவின் பெயரையும் இடத்தையும் வரையறுக்கிறது.

பின்வாங்கு

முந்தைய பக்கத்தில் தேர்தெடுக்கப்பட்ட அமைவுகளை பார்வையிட பின்வாங்கு பொத்தானைச் சொடுக்குக. நடப்பு அமைவுகள் நீங்கள் இந்தப் பொத்தானைச் சொடுக்கினால் மாற்றியமைக்கவோ அழிக்கவோப்படமாட்டது. பின்வாங்கு இரண்டாவது பக்கத்திலிருந்து செயலில் இருக்கும்.

அடுத்து

வழிகாட்டி நடப்பு அமைவுகளைச் சேமிப்பதுடன் அடுத்த பக்கத்திற்குச் செல்கிறது. அடுத்து பொத்தான் நீங்கள் கடைசி பக்கத்தில் அடைந்தபின் செயலற்றதாக்கப்படும்.

முடிவு

உங்களின் தெரிவுகளுக்கு ஏற்ப, வழிகாட்டி ஒரு ஆவண வார்ப்புருவை உருவாக்குவதோடு அத்னைச் சேமிக்கிறது. வார்ப்புருவின் அடிப்படையிலான ஒரு புது ஆவணம், " தலைப்பற்ற X" எனும் கோப்புப் பெயருடன் பணி பரப்பில் தோன்றுகிறது.

ரத்து

ரத்து ஐச் சொடுக்கினால் ஒரு உரையாடலில் செய்த எந்த மாற்றத்தையும் சேமிக்காமல் மூடிவிடும்.