பொது

நடப்பு ஆவணத்தின் அடிப்படை தகவலைக் கொண்டுள்ளது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - பண்புகள் - பொது கீற்றைத் தேர்க


கோப்பு

கோப்பின் பெயரைக் காட்சியளிக்கிறது.

வகை:

நடப்பு ஆவணத்திற்கான கோப்பு வகையைக் காட்சியளிக்கிறது.

இடம்:

கோப்பு சேர்த்துவைக்கப்பட்டுள்ள கோப்பகத்தின் பெயரையும் பாதையையும் காட்சியளிக்கிறது.

அளவு:

பைட்ஸில் நடப்பு ஆவணத்தின் அளவைக் காட்சியளிக்கிறது.

உருவாக்கப்பட்டது:

கோப்பு முதலில் சேமிக்கப்படும்போது தேதி, நேரம், ஆசிரியர் போன்றவற்றை காட்சியளிக்கிறது.

மாற்றியமைத்த:

தேதி, நேரம், ஆசிரியர் போன்றவற்றை கோப்பு இறுதியாக சேமிக்கப்படும்போது LibreOffice கோப்பு வடிவூட்டத்தில் காட்சியளிக்கிறது.

வார்ப்புரு:

கோப்பை உருவாக்க பயன்படுத்தப்பட்ட வார்ப்புருவைக் காட்சியளிக்கிறது.

எண்மியத்தில் ஒப்பமிட்டது:

இறுதியாக ஒப்பமிட்ட நேரம் மற்றும் தேதியையும் அதேபோல ஆவணத்தை ஒப்பமிட்ட ஆசிரியரின் பெயரையும் காட்சியளிக்கிறது.

எண்மிய கையொப்பம்

Opens the Digital Signatures dialog where you can manage digital signatures for the current document.

கடைசியாக அச்சிட்டது:

கோப்பு கடைசியாக அச்சிடப்பட்ட தேதி, நேரம், ஆசிரியர் போன்றவற்றைக் காட்சியளிக்கிறது.

மொத்த தொகுத்த நேரம்:

கோப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தொகுத்தலுக்காகத் திறக்கப்பட்டிருந்த நேரத்தின் தொகையைக் காட்சியளிக்கிறது. நீங்கள் கோப்ப்பபைச் சேமிக்கும்போது தொகுத்தல் நேரம் புதுப்பிக்கப்படுகிறது.

மீள்பார்வை எண்:

கோப்பு எத்தனை முறை சேமிக்கப்பட்டது எனும் எண்ணிக்கையைக் காட்சியளிக்கிறது.

பயனர் தரவை செயற்படுத்து

கோப்புடன் பயனரின் முழுப்பெயரைச் சேமிக்கிறது. - LibreOffice - பயனர் தரவுஐத் தேர்த்தெடுப்பதின் மூலம் நீங்கள் பெயரைத் தொகுக்க முடியும்.

பண்புகளை மீட்டமை

தொகுத்தல் நேரத்தை சுழியத்திற்கும், நடப்புத் தேதி மற்றும் நேரத்தின் உருவாக்கம், பதிப்பு எண்ணை 1 க்கும் மீட்டமைக்கிறது. மாற்றியமைத்தல், அச்சிடுதல் ஆகியவற்றிற்கான தேதிகளும் அழிக்கப்படுகின்றன.