வடிவூட்டு

காகித வடிவூட்டல் தேர்வுகளை அமை.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - புதிய - விளக்கச்சீட்டுகள் - வடிவூட்டு கீற்றைத் தேர்க

கோப்பு - புதிய - வணிக அட்டைகள்- வடிவூட்டு கீற்றைத் தேர்க


கிடைமட்டச் சுருதி

அடுத்தடுத்துள்ள விளக்கச்சீட்டுகளின் அல்லது வணிக அட்டைகளின் இடது விளிம்புகளிக்கிடையேயுள்ள தூரத்தைக் காட்சியளிக்கிறது. நீங்கள் ஒரு தனிப்பயன் வடிவூட்டை வரையறுத்தால், ஒரு மதிப்பை இங்கு உள்ளிடுக.

செங்குத்து சுழற்சி

விளக்கச்சீட்டின் மேல் விளிம்பு, ஒரு வணிக அட்டை, விளக்கச்சீட்ட்டின் மேல் விளிம்பு, நேரடி கீழ் வணிக அட்டை போன்றவற்றிடையேயுள்ள தூரத்தைக் காட்சியளிக்கிறது. நீங்கள் தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுத்தால், ஒரு மதிப்பை இங்கு உள்ளிடவும்.

அகலம்

விளக்கச்சீட்டு அல்லது வணிக அட்டைக்கான அகலத்தைக் காட்சியளிக்கிறது. நீங்கள் ஒரு தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுத்தால், ஒரு மதிப்பை இங்கு உள்ளிடவும்.

உயரம்

விளக்கச்சீட்டுக்கான அல்லது வணிக அட்டைக்கான உயரத்தைக் காட்சியளிக்கிறது. நீங்கள் ஒரு தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுத்தால், ஒரு மதிப்பை இங்கு உள்ளிடுக.

இடது ஓரம்

பக்கத்தின் இடது விளிம்பிலிருந்து , முதல் விளக்கச்சீட்டு அல்லது வணிக அட்டையின் இடது விளிம்பிற்குமான தூரத்தைக் காட்சியளிக்கிறது. நீங்கள் ஒரு தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுத்தால், ஒரு மதிப்பை இங்கு உள்ளிடவும்.

உயர் ஓரம்

பக்கத்தின் மேல் விளிம்பிலிருந்து முதல் விளக்கச்சீட்டு அல்லது வணிக அட்டையின் மேலுக்குமான தூரத்தைக் காட்சியளிக்கிறது. நீங்கள் ஒரு தனிப்பயன் வடுவூட்டத்தை வரையறுத்தால், இங்கு ஒரு மதிப்பை உள்ளிடவும்.

நிரல்கள்

நீங்கள் இடைஅகல்வு வெய்யவிருக்கும் பக்கத்தின் அகலத்திற்கான விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளின் எண்ணிக்கையை உள்ளிடுக.

நிரைகள்

நீங்கள் அகல்வு செய்யவிருக்கும் பக்கத்தின் உஅயரத்திற்கான விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளின் எண்ணிக்கையை உள்ளிடுக.

சேமி

நடப்பு விளக்கச்சீட்டையோ வணிக அட்டை வடிவூட்டலையோ சேமிக்கிறது.

விளக்கச்சீட்டு வடிவூட்டத்தைச் சேமி

தர அடையாளம்

விரும்பிய தர அடையாளத்தை உள்ளிடுக அல்லது தேர்க.

வகை

விளக்கச்சீட்ட்டின் வகையை உள்ளிடுக அல்லது தேர்க.

முன்னோட்டப் புலம்

நடப்புத் தெரிவின் ஒரு முன்னோட்டத்தைக் காட்டுகிறது.