விளக்கச்சீட்டுகள்

விளக்கச்சீட்டின் உரையைக் குறிப்பிட்டுவிட்டு விளக்கச்சீட்டுக்கான காதிக அளவைத் தேர்க.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - புதிய - விளக்கச்சீட்டுகள் - விளக்கச்சீட்டுகள் கீற்றைத் தேர்க


உள்ளெழுத்து

விளக்கச்சீட்டுகளில் தென்பட நீங்கள் வேண்டும் உரையை நுழை அல்லது உள்ளிடுக.

விளக்கச்சீட்டு உரை

விளக்கச்சீட்டில் தேன்பட நீங்கள் வேண்டும் உரையை உள்ளிடுக. ஒரு தரவுத்தளப் புலத்தையும் நீங்கள் நுழைக்கலாம்.

முகவரி

உங்கள் திரும்பும் முகவரியுடனான ஒரு விளக்கச்சீட்டை உருவாக்குகிறது. தற்போது விளக்கச்சீட்டு உரை பெட்டியில் உள்ள உரை மேலேழுதப்படும்.

Note Icon

உங்களின் திருப்பும் முகவரியை மாற்ற, - LibreOffice ஐத் தேர்ந்தெடுப்பதுடன், பிறகு பயனர் தரவு கீற்றில் சொடுக்குக.


தரவுத்தளம்

உங்கள் விளக்கச்சீட்டுக்குத் தரவு மூலமாக நீங்கள் பயன்படுத்த வேண்டும் தரவுத்தளத்தைத் தேர்க.

அட்டவணை

உங்கள் விளக்கச்சீட்டில் நீங்கள் பயன்படுத்த வேண்டும் புலங்களைக் கொண்ட அட்டவணையைத் தேர்க.

தரவுத்தளப் புலம்

உங்களுக்கு வேண்டிய தரவுத்தளத்தைத் தேர்ந்து, பிறகு புலத்தை விளக்கச்சீட்டு உரை பெட்டியில் நுழைக்க இப்பெட்டியின் இடதாக அம்பைச் சொடுக்கவும்.

தரவுத் தள புலத்தின் பெயரானது விளக்கச்சீட்டு உரை பெட்டியிலுள்ள அடைப்புகளால் சூழப்பட்டிருக்கிறது. நீங்கள் விரும்பினால, வெளிகளுடன் தரவுத் தளப் புலங்களைப் பிரிக்கலாம். ஒரு புதிய வரியினுள் ஒரு தரவுத் தளத்தை நுழைப்பதற்கு உள்ளிடை அழுத்துக.

வடிவூட்டு

உங்களின் விளக்கச்சீட்டுக்கான முன்-வரையறுத்த அளவு வடிவூட்டையோ வடிவூட்டு கீற்றில் நீங்கள் குறித்த அளவு வடிவூட்டையோ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்ச்சியாக

விளக்கச்சீட்டுகளைத் தொடர்ச்சியான தாளில் அச்சிடுகிறது.

தாள்

விளக்கச்சீட்டுகளைத் தனிப்பட்ட தாள்களில் அச்சிடுகிறது.

தர அடையாளம்

நீங்கள் பயன்படுத்த விரும்பும் தாளின் சுட்டுக் குறியைத் தேர்க. ஒவ்வொரு சுட்டுக் குறியும் அதன் சொந்த அளவு வடிவூட்டுகளைக் கொண்டிருக்கிறது.

வகை

நீங்கள் பயன்படுத்தவிரும்பும் அளவு வடிவூட்டைத் தேர்க. கிடைக்கப்பெறும் வடிவூட்டுகள் யாவும் நீங்கள் சுட்டுக் குறி பட்டியலில் தேர்ந்த சுட்டுக் குறியைச் சார்ந்தவையாகும். நீங்கள் தனிப்பயன் விளக்கச்சீட்டு வடிவூட்டைப் பயன்படுத்த விரும்பினால், [பயனர்] ஐத் தேர்ந்து, பிறகு வடிவூட்டத்தை வரையறுக்க வடிவூட்டு கீற்றைச் சொடுக்குக.

தகவல்

தாளின் வகையும் விளக்கச்சீட்டின் பரிமாணங்களும் வடிவூட்டு பரப்பின் கீழ்ப் பகுதியில் காட்சியளிக்கப்படுகின்றன.