LibreOffice டிரோ சிறப்பியல்புகள்

LibreOffice டிரோ உங்களை எளிய மற்றும் சிக்கலான வரைபடங்களை உருவாக்க அனுபதிப்பதோடு அவற்றை பிம்பம் வடிவூட்டத்தில் ஏற்றுமதிசெய்யும்.LibreOffice நிரலிகளில் உருவாக்கப்பட்ட அட்டவணைகள், விளக்கப்படங்கள், சூத்திரங்கள், மற்ற உருப்படிகள் ஆகியவற்றை உங்களின் வரைபடத்தில் நுழைக்கலாம்.

திசையன் வரைவியல்

கணித திசையன்களால் வரையறுத்த வரிகளையும் வளைவுகளையும் பயன்படுத்தி திசையன் வரைவியல்களை LibreOffice டிரோ உருவாக்குகிறது. வரிகள், நீள்வட்டங்கள், பல்கோணங்கள் ஆகியவற்றை அவற்றின் வடிவியல் அடிப்படையில் திசையன்கள் விவரிக்கும்.

3D பொருள்களை உருவாக்குதல்

கனசதுர,கோளங்கள் மற்றும் உருளைகள் போன்ற எளிய 3D பொருள்களைLibreOffice டிரோவில் உருவாக்குவதோடு பொருட்களின் ஒளி மூலத்தை மாற்றியமை.

பின்னல்களும் வரிகளை பிடி

உங்கள் வரைதலில் பொருள்களைச் சீரமைப்புவதற்கான காட்சி சார்ந்த கடைச்சொல்களைப் பின்னல்களும் பிடி வரிகளும் வழங்குகின்றன. நீங்கள் ஒரு பின்னல் வரி, பிடி வரி அல்லது மற்ற பொருளின் விளிம்புக்கான பிடியையும் தேர்ந்தெடுக்கலாம்.

உறவுகளைக் காட்டுவதற்குப் பொருள்களை இணைத்தல்

பொருள்களிடையேயுள்ள தொடர்பைக் காட்டுவதற்கு LibreOffice வரையிலுள்ள பொருள்களை "இணைப்பான்கள்" என அழக்கப்படும் சிறப்பு வரிகளுடன் இணைக்கலாம். இணைப்பான்கள் வரை பொருள்களிலுள்ள ஒட்டுப் புள்ளிகளுடன் இணைவதோடு இணைக்கப்பட்ட பொருள்கள் நகர்த்தப்படும்போது இணைக்கப்பட்டே இருக்கும். இணைப்பான்கள் அமைப்பின் விளக்கப்படங்களையும் தொழிற்நுட்ப விளக்கப்படத்தையும் உருவாக்க பயன்படும்.

பரிமாணங்களைக் காட்சியளித்தல்

தொழிற்நுட்ப விளக்கப்படங்கள் அடிக்கடி வரைதலிலுள்ள பொருள்களின் பரிமாணங்களைக் காட்டும். LibreOffice வரைதலில், நீங்கள் பரிமாண வரிகளைப் பயன்படுத்தவும் நேரியல் பரிமாணங்களைக் காட்சியளிக்கவும் முடியும்.

காட்சியகம்

காட்சியகம் பிம்பங்கள், அசைவூட்டங்கள், ஒலிகள் மற்றும் நீங்கள் நுழைக்கவும் உங்கள் வரைதலிலும் மற்ற LibreOffice நிரலிகளிலும் பயன்படுத்த முடிகின்ற மற்ற உருப்படிகளையும் கொண்டிருக்கிறது.

வரைவியல் கோப்பு வடிவூட்டங்கள்

LibreOffice வரை, நிறைய பொது வரைவியல் கோப்பு வடிவூட்டங்களான BMP, GIF, JPG, மற்றும் PNG போன்றவைகளுக்கு ஏற்றுமதி செய்யும்.