பொருள்களை அடுக்குதல்,சீரமைத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல்

பொருள்களை அடுக்குதல்

உங்கள் ஆவணத்தில் வைக்கும் ஒவ்வொரு பொருளும் வெற்றிகரமாக முந்தைய பொருளின் மீது அடுக்கப்படுகின்றன. ஒரு தேர்ந்த பொருளின் அடுக்கை மாற்றியடுக்க, பின்வருமாறு தொடர்க.

  1. நீங்கள் இடம் மாற்ற விரும்பும் பொருளைச் சொடுக்குக.

  2. சூழல் பட்டியைக் கொண்டுவரவும் அடுக்குத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் மாற்றியமை - அடுக்கு ஐத் தேர்:

    முன்புறம் கொண்டுவா மற்ற அனைத்துப் பொருள்களுக்கும் மேல் பொருளை வைக்கிறது

    முன்னனுப்பு பொருள் அடுக்கில் ஒரு இடம் முன்னே பொருளை வைக்கிறது

    பின்னனுப்பு பொருள் அடுக்கில் ஒரு இடம் பின்னே பொருளை வைக்கிறது

    பின்புறம் அனுப்பு மற்ற அனைத்துப் பொருள்களின் பின்னே பொருளை வைக்கிறது

    பொருளின் பின்னால் நீங்கள் தேர்ந்த மற்றொரு பொருளின் பின்னால் பொருளை வைக்கிறது

மற்றொரு பொருளுக்குப் பின் ஒரு பொருளை அடுக்குதல்

  1. நீங்கள் இடம் மாற்ற விரும்பும் பொருளைச் சொடுக்குக.

  2. சூழல் பட்டியைத் திறப்பதற்கு மாற்றியமை - அடுக்கு ஐயும் பொருளின் பின்னால் ஐயும் தேர்ந்தெடுக. சுட்டெலி சுட்டி கைக்கு மாறுகிறது.

  3. தேர்ந்த பொருளை நீங்கள் வைக்கவிருக்கும் பொருளின் பின் சொடுக்குக.

இரு பொருள்களின் அடுக்கு ஒழுங்கைத் திருப்பிப்போடுதல்

  1. இரு பொருள்களையும் தேர அவற்றை shift+சொடுக்குக.

  2. சூழல் பட்டியைத் திறக்க மாற்றியமை - அடுக்கு ஐத் தேர்வதோடு நேர்மாற்று ஐத் தேர்க.

பொருள்களைச் சீரமைத்தல்

சீரமைப்பு செயலாற்றி பொருள்களை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவாறோ பக்கத்தோடு தொடர்புள்ளவாறோ நீங்கள் சீரமைக்க உதவுகிறது.

  1. பக்கத்துடன் சீரமைக்க ஒரு பொருளைத் தேர்க அல்லது ஒன்றுக்கொன்று சார்ந்தவாறு சீரமைக்க பல பொருள்களைத் தேர்க.

  2. மாற்றியமை - சீரமைப்புஐத் தேர்ந்தபின் சீரமைப்புத் தேர்வுகளில் ஒன்றைத் தேர்க.

பொருள்களைப் பகிர்ந்தளித்தல்

வரைதலில் நீங்கள் மூன்று அல்லது மேலும் பொருள்களைத் தேர்ந்தால், பொருள்களுக்கிடையே சமமாக இடைவெளியைப் பகிர்ந்தளிக்க பகிர்ந்தளிப்புகட்டளையையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

  1. பகிர்ந்தளிக்கப்படுவதற்காக மூன்று அலலது மேலும் பொருள்களைத் தேர்க.

  2. மாற்றியமை - பகிர்ந்தளித்தல் ஐத் தேர்ந்தெடுக.

  3. கிடைமட்டம், செங்குத்து பகிர்ந்தளித்தல் தேர்வைத் தேர்வதோடு சரிஐச் சொடுக்குக.

தேர்ந்த பொருள்கள் சமமாகக் கிடைமட்ட அல்லது செங்குத்து அச்சுக்களில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இரண்டு புறப்புற பொருள்கள் மேற்கோள் புள்ளிகளாகப் பயன்படுத்தப்படுவதோடு பகிர்ந்தளித்தல் கட்டளை செயலாக்கப்படுகையில் அவற்றை நகர்த்தக்கூடாது.