குறி விளக்கம்

குறி விளக்கம்உரையாடலைத் திறக்கிறது, இது உங்களை விளக்கப்படத்திலுள்ள குறி விளக்கங்களின் இடத்தை மாற்றவும், குறி விளக்கம் காட்சியக்கப்படுவதைக் குறிப்பிடவும் அனுமதிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

தேர்ந்தெடுநுழை-குறி விளக்கம்(விளக்கப்படம்)

தேர்ந்தெடுவடிவமைப்பு-குறி விளக்கம்-இடம்கீற்று(விளக்கப்படம்)


ஒரு குறி விளக்கத்தைக் காட்டவோ மறைக்கவோ, வடிவூட்டல்பட்டையிலுள்ள குறி விளக்கம் திற/அடை ஐச் சொடுக்குக.

படவுரு

குறி விளக்கம் திற/அடை

காட்சி

விளக்கப்படத்திற்கான குறி விளக்கத்தைக் காட்சியளிக்க வேண்டுமா என்பதைக் குறிப்பிடுகிறது. இத்தேர்வானது நீங்கள் நுழை - குறி விளக்கம் ஐத் தேர்ந்து உரையாடலை அழைத்தால் மட்டுமே தென்படும்.

இடம்

குறி விளக்கத்திற்கான இடத்தைத் தேர்க:

இடது

விளக்கப்படத்தின் இடதிலுள்ள குறி விளக்கத்தை நிலைப்படுத்துகிறது.

மேல்

விளக்கப்படத்தின் மேலுள்ள குறி விளக்கத்தை நிலைப்படுத்துகிறது.

வலது

விளக்கப்படத்தின் வலதிலுள்ள குறி விளக்கத்தை நிலைபடுத்துகிறது.

கீழ்

விளக்கப்படத்தின் கீழுள்ள குறி விளக்கத்தை நிலைப்படுத்துகிறது.

உரைத் திசையமைவு

இந்தச் சிறப்பியல்ப்பபானது - மொழி அமைப்புகள் - மொழிகள் இல் தளக்கோல ஆதரவு இயக்கப்பட்டிருந்தால், மட்டுமே கிடைக்கும்.

உரைத் திசை

(CTL) சிக்கலான உரைத் தளக்கோலத்தைப் பயன்படுத்தும் ஒரு பத்திக்கான உரைத் திசையைக் குறிப்பிடுக. இந்தச் சிறப்பியல்பானது சிக்கலான உரைத் தளக்கோல ஆதரவு செயல்படுத்தப்பட்டால் மட்டுமே கிடைக்கும்.