நிரல் குறியீட்டுடன் ஒரு உரையாடலைத் திறக்க

LibreOffice BASIC சாளரத்தில் நீங்கள் உருவாக்கிய உரையாடலுக்கான, உரையாடல் ஒப்படைக்கப்பட்ட நிரல்கூறின் பெயர் கீற்றைச் சொடுக்குவதன் மூலம் உரையாடல் தொகுப்பியை விட்டு வெளியேறுக. பெயர் கீற்றானது சாளரத்தின் கீழ்ப் பகுதியில் உள்ளது.

Dialog1Show என்றழைக்கப்படும் துணைநிரலுக்காகப் பின்வரும் குறியீட்டை உள்ளிடுக. இந்த எடுத்துக்காட்டில், நீங்கள் உருவாக்கிய உரையாடலின் பெயர் "உரையடல்1" ஆகும்.

Sub Dialog1Show

    BasicLibraries.LoadLibrary("Tools")

    oDialog1 = LoadDialog("Standard", "Dialog1")

    oDialog1.Execute()

End Sub

"ஏற்றுஉரையாடல்" ஐப் பயன்படுத்தாமல் நீங்கள் குறியீட்டைப் பின்வருமாறு அழைக்கலாம்:

Sub Dialog1Show

    DialogLibraries.LoadLibrary("Standard")

    oDialog1 = CreateUnoDialog( DialogLibraries.Standard.Dialog1 )

    oDialog1.Execute()

End Sub

நீங்கள் இந்தக் குறியீடை நிறைவேற்றும்பொழுது, "உரையாடல்1" திறக்கிறது. உரையாடலை மூடுவதற்கு, அதன் தலைப்புப் பட்டையிலுள்ள மூடு (x) பொத்தானைச் சொடுக்கவும்.